மனஉளைச்சலில் சாவுங்க.. விஜய் டிவியை வம்புக்கு இழுக்கிறாரா வனிதா.. எதுக்கு இப்படி ஒரு பதிவு?
சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய வனிதா மனஉளைச்சலில் சாவுங்க என்ற பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக முடிந்தது. இதில், ராஜூ டைட்டில் வின்னர் ஆனார், 2வது இடத்தை பிரியங்காவும், 3வது இடத்தை பவானியும் பெற்றனர்.
பிக் பாஸ் சீசன் 5 முடிந்த உடனே, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியானது.

பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சீசன் 1லிருந்து சினேகன், சுஜா, மற்றும் ஜூலி, சீசன் 2லிருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி, சீசன் 3 ல் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார், சீசன் 4 லிருந்து பாலாஜி முருகதாஸ், அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்தி மற்றும் இறுதியாக சமீபத்தில் முடிந்த சீசன் 5 ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபினய் ஆகியோர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர்.

வனிதா வெளியேறினார்
முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறினார். அடுத்து சுஜா வெளியேற்றப்பட்டார். மூன்றாவது வாரம், யாரும் எதிர்பார்க்க படி, டபுள் எவிக்ஷனில் ஷாரிக் மற்றும் அபினய் எலிமினேட் ஆனார்கள். இதையடுத்து, வனிதா விஜயகுமார் வீட்டிலிருந்து தானாகவே வெளியேறினார்.

முதுகில் குத்துகிறார்கள்
வனிதாவுக்கு ஆதரவளித்து அனைத்து போட்டியாளர்களும் பேசி வந்த நிலையில், திடீரென அனைவரும் அவருக்கு எதிராக திரும்பியதை, அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாற்றி மாற்றி பேசுகிறார்கள், முதுகில் குத்துகிறார்கள், இழிவாக நினைக்கிறார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை பிக் பாஸிடம் கூறினார். அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு உள்ளீர்கள் என பிக்பாஸ் எவ்வளவு எடுத்துச்சொல்லியும் வீட்டில் இருக்க மறுத்துவிட்டார் வனிதா.

மன உளைச்சல் உங்களைக் கொல்லட்டும்
வீட்டிலிருந்து வெளியே வந்த வனிதா, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி குறித்து எதுவும் பேசாமல் இருந்த நிலையில், தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில், வன்முறை, ஆக்ரோஷமான உடல் நடத்தை, தவறான வார்த்தைகள் மற்றும் மன உளைச்சல் ஆகியவை உங்களைக் கொல்லக்கூடும்... நான் அதற்கு எதிரானவன், அதுவே என் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வைத்தது... மேலும் நான் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பது என்னவென்று உனக்குத் தெரியும்.பிக்பாஸ்அல்டிமேட். என பதிவிட்டுள்ளார்.

வம்புக்கு இழுக்கும் வனிதா
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் பெயர் கேட்டுவிடும், மன அழுத்தம் ஏற்படும் என அதில் பங்கேற்ற பலரும் கூறிவரும் நிலையில், வனிதாவும் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது வைத்துள்ளதை பார்க்கும் போது வனிதா விஜய் டிவியை வம்புக்கு இழுக்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications











