Vijay: விஜய்க்கு வாழ்த்து சொன்ன வனிதா விஜயகுமார்.. கமெண்ட் செக்‌ஷனில் கூடவே வந்த வம்பு - விபரம்!

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, இன்று அதன் முதல் மாநாட்டினை கொள்கைத் திருவிழா என்ற பெயரில் நடத்த ஆயத்தமாகி வருகின்றார். இவருக்கு திரைத்துறையில் இருந்து பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், இன்று அவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனது வாழ்த்துடன் இருவரும் இணைந்து நடித்த சந்திரலேகா படத்தின் போது எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவுக்கு இணையவாசிகள் செய்த கமெண்ட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தினை தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியாக மாற்றி அறிவித்தார். இந்த அறிவிப்புக்காக பல நாட்கள் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. அத்துடன் விஜய் சினிமாவில் தற்போது ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துவிட்டு, சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்தார். விஜய்யின் இந்த முடிவை யாருமே எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

vanitha vijayakumar thalapathy vijay tvk maanadu

இந்நிலையில் அவர் தற்போது நடித்து வரும் தளபதி 69 படம்தான் இவரது சினிமா வாழ்க்கையில் கடைசிப் படம் என கூறப்படுகின்றது. ஒருசிலரோ தொடர்ந்து படத்தில் நடிக்கும் முடிவுக்கு விஜய் வருவார், காலம் அவரை அந்த நிலைக்கு கொண்டு வரும் என கூறிவருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ள வருபவர்கள் மிகவும் பாதுகாப்பான பயணத்தினை மேற்கொண்டு வரும்படி விஜய் ரசிகர்களுக்கு வலியுறுத்தினார். இதுமட்டும் இல்லாமல், பள்ளிக்குழந்தைகள், வயதானவர்களை மாநாட்டிற்கு வரவேண்டாம் எனவும் விஜய் கோரிக்கை வைத்தார்.

vanitha vijayakumar thalapathy vijay tvk maanadu

வாழ்த்து: மாநாட்டு நிகழ்ச்சி நிரல் மதியம் 2 மணிக்கு மேல்தான் தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்களும் தொண்டர்களும் காலையில் இருந்தே மாநாட்டுத் திடலில் காத்துள்ளனர். இப்படியான நிலையில் திரைத்துறையினர் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இயக்குநர்கள் வெங்கட் பிரபு, மோகன் ராஜா, சமுத்திரக்கனி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். பிரேம் ஜி சிறப்பு டி.பி வெளியிடு வாழ்த்தினார்.

vanitha vijayakumar thalapathy vijay tvk maanadu

சூர்யா: நேற்று கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசும்போதும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் தான் நடித்த சந்திரலேகா படத்தின் படபிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.

vanitha vijayakumar thalapathy vijay tvk maanadu

கமெண்ட்: இந்தப் பதிவினைப் பார்த்த இணையவாசிகள், TVK மகளிர் அணி தலைவி வாழ்க எனவும் தளபதி உங்க கல்யாணத்துக்கு வருவாரா எனவும், வாழ்த்து சொல்ல இந்த போட்டோவைத்தான் யூஸ் பண்ணனுமா எனவும் வனிதாவை வம்புக்கு இழுக்கும் வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர். வனிதாவின் இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

vanitha vijayakumar thalapathy vijay tvk maanadu

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X