Bigg boss tamil 7: வனிதாவை கூலாக மாற்றிய பிக்பாஸ் நிகழ்ச்சி.. உலகநாயகனிடம் பகிர்ந்த ஜோவிகா!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமாரை தொடர்ந்து அடுத்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது மகள் ஜோவிகாவும் இணைந்துள்ளார்.

முன்னதாக விஜய் டிவியின் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் வனிதா விஜயகுமார்.

Actress vanitha Vijayakumars Daughter Jovika opens up about her in Bigg boss tamil 7 show

இந்நிலையில் தற்போது அவரது மகள் ஜோவிகாவும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சி நேற்றைய தினம் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது.

தன்னுடைய அம்மா குறித்து கமலிடம் பேசிய ஜோவிகா: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு தற்போது 7வது சீசனில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துள்ளது. தொடர்ந்து 7வது சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான துவக்கம் நேற்றைய தினம் துவங்கியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் போட்டியாளர்களின் அறிமுகத்தை கமல்ஹாசன் சிறப்பாக செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். நேற்றைய தினம் நிகழ்ச்சியில் இவரை ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். சிறிய வயதிலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். தன்னுடைய அம்மாவின் சமூக வலைதளப்பக்கங்களில் இவரை அதிகமாக காண முடியும். அந்த வகையில் நேற்றைய தினம் இவரை அறிமுகம் செய்த கமல்ஹாசன், போட்டியில் பங்கேற்பதற்காக அவருடைய அம்மா வனிதா, என்ன டிப்ஸ் கொடுத்தார் என்று கேள்வி எழுப்பினார்.

Actress vanitha Vijayakumars Daughter Jovika opens up about her in Bigg boss tamil 7 show

இதற்கு பதிலளித்த ஜோவிகா, அம்மா டிப்ஸ் எதுவும் கொடுக்கவில்லை என்று கூற, ஏன் கொடுக்கவில்லை என்று வனிதாவிடமே கமல்ஹாசன் கேட்டார். இதற்கு பதிலளித்த வனிதா விஜயகுமார், பிக்பாஸ் வீட்டிற்குள் பலமுறை சென்ற போதிலும் வெளியேறிய நிலையில், தான் டிப்ஸ் கொடுத்தால் தன்னுடைய மகள் எப்படி வெற்றி பெற முடியும் என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னுடைய அம்மாவிடம் செய்துள்ள மாற்றம் குறித்து ஜோவிகா வெளிப்படுத்தினார்.

எப்போதும் கோபமாக இருக்கும் தன்னுடைய அம்மா வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவதாகவும் இந்த நிகழ்ச்சி தன்னுடைய அம்மாவிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நிகழ்ச்சியின் துவக்கவிழாவில், தன்னுடைய இளையமகளுடன் கலந்துக் கொண்டு, ஜோவிகாவிற்கு உற்சாகம் அளித்தார் வனிதா விஜயகுமார்.

முன்னதாக பிக்பாஸ் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார் வனிதா விஜயகுமார். இந்த நிகழ்ச்சிகள் வனிதாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்துள்ளன. தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவிலும் பங்கேற்று டைட்டிலை கைப்பற்றிய வனிதா விஜயகுமார் அதிரடி கருத்துக்களையும் செயல்களையும் செய்து ரசிகர்களை கவர்ந்தவர். அந்த வகையில் அவரது மகளின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X