கமல் போனதுக்கு காரணமே வேற... பிக்பாஸ் அல்டிமேட் குறித்து பகீர் கிளப்பை வனிதா!
சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணிநேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 5 சீசன்களில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் தன்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறி நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலனார். தற்போது நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இரவு நேரத்தில் ஒளிபரப்பானாலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றியின் ரகசியம்.

கமல் தொத்து வழங்கிய நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தார் நடிகர் கமல்ஹாசன். தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சி 24 மணிநேரமும் வழங்கப்பட்ட நிலையிலும் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடந்த 30 நாட்களாக நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

விலகிய கமல்
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறி கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதையடுத்து நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். 5 ஆண்டுகளை தாண்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் விலகியது பல்வேறு யூகங்களுக்கு அடிப்படையாக அமைந்தது.

வனிதா கூறிய காரணம்
இதனிடையே, கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விக்ரம் படத்தின் சூட்டிங் காரணமல்ல என்று அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த வனிதா தற்போது தெரிவித்துள்ளார். கமல் விலகிய உடன் அவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சூட்டிங்கிற்கு நேரம் ஒதுக்கியிருக்கலாம்
விக்ரம் படத்தின் தயாரிப்பாளரே கமல்தான் என்று கூறியுள்ள வனிதா, அவர் நினைத்திருந்தால் சூட்டிங்கிற்கு நேரம் ஒதுக்கியிருக்க முடியும் என்றும் அதிகபட்சமாக அந்த படத்தின் எஞ்சிய சூட்டிங் 4 நாட்களே இருந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட்டிலிருந்து கமல் விலகியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தவறாக செல்லும் பிபி அல்டிமேட்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தவறாக செல்கிறது என்று அறிந்ததாலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி, பிக் பாஸ் சீசன் 6ல் வருகிறேன் என்று கூறிவிட்டு அவர் கிளம்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் போட்டியாளர்களாக இருந்த தாங்களும் இந்த நிகழ்ச்சியை தவறாக கொண்டு செல்கிறார்கள் என்பது குறித்து முன்னதாக பேசியதாகவும் வனிதா கூறினார்.

மன அழுத்தத்தை கொடுத்த நிகழ்ச்சி
தனக்கு இந்த நிகழ்ச்சி மன அழுத்தத்தை கொடுத்ததால் தான் நிகழ்ச்சியில் இருந்து விலகியதாகவும் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் சரியில்லை என்றும் அவர் தடாலடியாக குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே கமல், வனிதா வெளியேற்றம் குறித்து ரசிகர்கள் காரணம் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது வனிதாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











