பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த வனிதா விஜயகுமார்!
சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் திருமணத்திற்கு முன்பாக சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நிலையில் படங்களில் நடிப்பதிலிருந்து விலகினார்.
தொடர்ந்து திருமணம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவர், விஜய் டிவியின் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவனம் ஈர்த்தார்.
குடும்ப பிரச்சினை காரணமாக தன்னுடைய குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

நடிகை வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் முதல் படத்திலேயே நடிகர் விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ள வனிதா விஜயகுமார், தொடர்ந்து மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வனிதா
தொடர்ந்து திருமணம் செய்துக் கொண்டு நடிப்பிலிருந்து விலகிய வனிதா விஜயகுமார், விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1, பிக்பாஸ் சீசன் 3, கலக்கப் போவது யாரு, பிக்பாஸ் ஜோடிகள் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இதில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் முரண்பட்டு, பாதியிலேயே விலகினார்.

படங்களில் வாய்ப்பு
இதேபோல பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற இவர், பாதியிலேயே அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகினார். இதனிடையே பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கொடுத்த பிரபலத்தின் மூலம் வனிதா விஜயகுமாருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

அதிரடி கருத்துக்கள்
அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு, தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் ராதாரவியுடன் கொடைக்கானலில் புதிய படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டார். தொடர்ந்து அதிரடியாக பல கருத்துக்களை கூறி தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் வனிதா விஜயகுமார்.

பழனி கோயிலில் சாமி தரிசனம்
இந்நிலையில் தற்போது தான் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து, கோயிலில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று கேப்ஷனில் சாமியை குறிப்பிட்டுள்ளார்.

நெகட்டிவ் விளம்பரங்கள்
அடுத்தடுத்து அடாவடி கருத்துக்களால் நெகட்டிவ் விளம்பரங்களுக்கு உள்ளாகி வருகிறார் வனிதா விஜய்குமார். தன்னுடைய மூன்றாவது கணவரையும் இவர் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஒருபுறம் படங்களிலும் பிசியாகியுள்ள நிலையில், தற்போது கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் வனிதா விஜயகுமார்.


Click it and Unblock the Notifications











