நடிகை வனிதா மூன்றாவது திருமணம்.. மகளே மணப்பெண் தோழியானார்.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: நடிகை வனிதா நேற்று மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது திருமண வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Vanitha Peter Paul Christian Wedding • Jaynitha, Jovika Lovely Moments

நடிகை வனிதா விஷ்வல் எடிட்டரான பீட்டர் பாலை நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்த நடிகை வனிதா, கருத்து வேறுபாடு காரணமாக அவர்களை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் தான் யூட்யூப் சேனல் தொடங்க முக்கிய காரணமாய் இருந்த விஷ்வல் எடிட்டர் பீட்டர் பாலை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.

மகள்கள் விருப்பம்

மகள்கள் விருப்பம்

வனிதா - பீட்டர் பால் திருமணம் தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் அதிகாரப்பூர் அறிக்கைகள் கடந்த சில நாட்களாக சமூகு வலைதளங்களில் வைரலானது. தனக்கு என யாரும் இல்லாததால் மகள்களின் விருப்பப்படி பீட்டர் பாலை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார்.

பச்சை குத்தி

பச்சை குத்தி

வனிதாவின் திருமணத்திற்கு வாழ்த்து கூறிய அவரது மூத்த மகள் ஜோவிகா இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றையும் ஷேர் செய்தார். அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து பீட்டர் பாலின் பெயரை வனிதாவும் வனிதாவின் பெயரை பீட்டர் பாலும் தங்களின் கைகளில் பச்சை குத்தியிருந்தனர்.

தோழியாக

தோழியாக

இந்நிலையில் லாக்டவுன் காரணமாக நேற்று நடிகை வனிதா தனது வீட்டில் பீட்டர் பாலை கிறிஸ்டியன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். வெள்ளை நிற உடையில் தேவதை போல் இருந்தார் வனிதா. தனது அறையில் இருந்து திருமணம் நடைபெறும் ஹாலுக்கு அவரை அவரது மூத்த மகளான ஜோவிகா தோழியாக கையைப் பிடித்து அழைத்து வந்தார்.

லிப்லாக் முத்தம்

லிப்லாக் முத்தம்

வெட்கத்துடன் தலைகுனிந்து வந்த தனது தாயான மணப்பெண்ணை மாப்பிள்ளை கையில் ஒப்படைத்தார் ஜோவிகா. இதனை தொடர்ந்து இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்துக்கொண்டனர். தொடர்ந்து தங்களின் அன்பை வெளிப்படுத்தும் வகையில் இருவரும் உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டனர்.

மகளே தோழி

மகளே தோழி

19 வயதில் மகன், வயதுக்கு வந்த மகள் உள்ள நிலையில் 40 வயதில் இந்த நடிகைக்கு மூன்றாவதாக திருமணம் தேவைதானா என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் மகள்களின் ஃபுல் சப்போர்ட்டுடன், மகளே மணப்பெண் தோழியாக தனது காதலரான பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார் வனிதா.

காதல் கணவருடன்..

காதல் கணவருடன்..

இதனை தொடர்ந்து மகள்கள் மற்றும் காதல் கணவருடன் சேர்ந்து நடிகை வனிதா கேக் வெட்டினார். வனிதாவுக்கு அவரது கணவர் கேக் ஊட்டி விட்டார். இதனை திருமணத்தில் பங்கேற்ற நண்பர்களும் உறவினர்களும் கைகளை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

வைரலாகும் வீடியோக்கள்

வைரலாகும் வீடியோக்கள்

வனிதா திருமணத்திற்கு முன்னதாக தான் மேக்கப் போட்டு தாயாராகும் வீடியோவை தனது யூட்யூப் சேனலில் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் வனிதாவின் கல்யாண போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் வனிதாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X