அன்று திட்டு.. இன்று பாராட்டு.. அண்ணனுக்கு வாழ்த்து சொன்ன வனிதா.. சொந்தம் விட்டுபோகுமா என்ன?
சென்னை : கடின உழைப்பும் விடாமுயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது என அருண்விஜய்யை குறிப்பிட்டு வனிதா வாழ்த்து கூறியுள்ளார்.
Recommended Video
மூத்த நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர் குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக இருந்து வருகிறார்.
இருப்பினும் வனிதா தனது தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து உட்பட எந்த முக்கிய தருணங்களிலும் தனது வாழ்த்துக்களை பகிர மறப்பதில்லை.

நடிகை வனிதா
தமிழ் சினிமாவில் 90 களில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த வனிதா விஜயகுமார் திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தார். இதையடுத்து, விஜய் டிவி நிகழ்ச்சி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் இவரின் துணிச்சலான பேச்சும், தைரியமும் ஏகப்பட்ட ரசிகர்களை இவருக்கு பெற்றுத்தந்தது.

படு பிஸியாக
அதனைத் தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சி, திரைப்படங்களில் நடிப்பு, பிஸினஸ், யூடியூப் சேனல் என படு பிஸியாக இருந்து வருகிறார் வனிதா. அப்பா, அண்ணன், சகோதரிகள் என பலர் இருந்தும் தனியாக இருப்பதால், அவ்வப்போது தனது குடும்பத்துடன் சேருவதற்கான முயற்சிகளில் இறங்கினாலும் குடும்பத்தினர் இவரை கண்டும்காணாமல் உள்ளனர்.

அண்ணனுக்கு வாழ்த்து
இந்நிலையில், நடிகர் அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கிய யானை திரைப்படம் இன்று வெளியாகி பலரின் பாராட்டை பெற்று வரும் நிலையில், அருண் விஜய்யின் தங்கை வனிதா விஜயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கடின உழைப்பும், விடா முயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அன்று பகை.. இன்று அன்பு
பல வருடங்களாக அருண் விஜய்யும், அவரது அக்கா வனிதாவும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது வனிதா வாழ்த்து தெரிவித்துள்ளது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. யானை படத்தை இயக்கிய ஹரி, வனிதாவின் தங்கை கணவர் என்பதால் அவர் வாழ்த்து தெரிவித்திருக்கலாம் என்றும், அன்று அண்ணன் மீது குறை சொன்ன வனிதா இன்று அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், என்னத்தான் இருந்தாலும் சொந்தம் விட்டுபோகுமா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications