குடும்பத்துடன் இலங்கைக்கு ஜாலி ட்ரிப் போன வரலட்சுமி சரத்குமார்...நல்லா சுத்தி போடுங்கப்பா!
சென்னை : நடிகை வரலட்சுமி சரத்குமார் குடும்பத்துடன் இலங்கைக்கு ஜாலியாக இன்பசுற்றுலா சென்றுள்ளார்.
தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் வரலட்சுமி.
அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் கமிட்டான வரலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

வரலட்சுமி சரத்குமார்
பாலிவுட்டை போல தமிழ் சினிமா உலகிலும் காலம் காலமாக தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சூப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

வில்லியாக
போடா போடி, தாரைதப்பட்டை போன்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் வரலட்சுமி. கதாநாயகி கதாபாத்திரத்தை விட இவருக்கு வில்லி கதாபாத்திரம் பக்காவாக பொருந்தியது. விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இந்தபடங்களை தொடர்ந்து இவர் அதிகமாக நெகட்டிவ் கதாபாத்திரத்திலே நடித்து வருகிறார்.

இரவின் நிழல்படத்தில்
பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி இரவின் நிழல் படத்தில் பெண் சாமியார் ரோலில் நடித்திருந்தார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடித்திருந்தனர். தற்போது இவர் பாம்பன், பிறந்தாள் மகாலட்சுமி, சபரி, என்ற தமிழ் படத்திலும், கலர் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

நல்லா சுத்திப்போடுங்க
இந்நிலையில், வரலட்சுமி சரத்குமார் தனது குடும்பத்துடன் இலங்கையின் கொழும்பு நகரில் குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அங்குள்ள சுதந்திர சதுக்கத்தில் பள்ளிக் கல்லூரி மாணவிகளுடன் நடிகர் சரத்குமார் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இந்த போட்டோவைப்பார்த்த ரசிகர்கள் பலர் கண்ணுப்பட போகுது, நல்லா சுத்திப்போடுங்க என்று நல்லா சுத்தி போடுங்க என்று கருத்து கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











