பிகினியில் வரலட்சுமி சரத்குமார்.. குடும்பத்தோடு நீச்சல்குளத்தில் கும்மாளம் போட்ட வீடியோ!

சென்னை : நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ பல லைக்குகளை பெற்று வருகிறது.

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளான வரலட்சுமி, போடா போடி படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார்.

அதன் பின்னர் பல்வேறு படத்தில் கமிட்டான வரலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் சரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார்

பாலிவுட் சினிமாவைப் போல தமிழ் சினிமாவிலும் பல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சூப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் என்ற அங்கீகாரத்தோடு சினிமாவில் சுலபமாக நுழைந்த வரலட்சுமி. தனக்கான இடத்தை பிடிக்க ழுமு மூச்சுடன் களத்தில் குதித்து இன்று நல்ல நடிகை என பெயர் எடுத்துள்ளார்.

அட்டகாசமான நடிப்பு

அட்டகாசமான நடிப்பு

பாலா இயக்கத்தில் தாரைதப்பட்டை படத்தில் அந்த கதாபாத்திற்கு ஏற்றபடி பேச்சு, நடை,உடை,பாவனை என அனைத்தையும் மாற்றி சும்மா அட்டகாசமாக நடித்த வரலட்சுமிக்கு அந்த படம் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து, ஹீரோயின் கதாபாத்திரம் தனது செட்டாகாது என்று தெரிந்து கொண்ட வரலட்சுமி, மிரட்டலான வில்லி வேடத்தை ஏற்று நடித்தார்.

வில்லியாக

வில்லியாக

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இந்தபடங்களை தொடர்ந்து இவர் அதிகமாக நெகட்டிவ் கதாபாத்திரத்திலே நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இரவின் நிழல் படத்திலும் பெண் சாமியார் ரோலில் நடித்திருந்தார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன.

குடும்பத்தோடு செம ஜாலி

வரலட்சுமி சரத்குமார் கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் ஜாலியாக இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சமீபத்தில், கொழும்பில் இருக்கும் போட்டோவை பகிர்ந்து இருந்தார். தற்போது வரலட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குடும்பத்தோடு நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி, ரேயான், ராகுல் ஆகியோர் உள்ளனர். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் பலர் அழகான கூட்டுக்குடும்பம் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X