twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தாலுக்கா தோறும் பெண்கள் நீதிமன்றங்கள் அமைக்க நடிகை வரலட்சுமி வலியுறுத்தல்

    பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் நீதி கிடைக்கவும் தாலுக்காக்கள் தோறும் பெண்கள் நீதிமன்றம் அமைக்கவேண்டும் என நடிகை வரலட்சுமி சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

    By Vazhmuni
    |

    சென்னை : பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் வகையிலும் அவர்களுக்கு நீதி கிடைக்கவும் தாலுக்காக்கள் தோறும் மகிளா நீதிமன்றம் அமைக்கவேண்டும் என நடிகை வரலட்சுமி சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தேடல் என்ற அமைப்பு சார்பில் இன்று போரட்டம் நடத்தப்பட்டது. 70 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். நதிகளை இணைக்கவும், விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கவும், விளைநிலங்களைப் பாதுகாக்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

     Actress Varalakshmi Sarathkumar supports student protest

    இந்த போராட்டத்திற்கு நடிகர் வரலட்சுமி சரத்குமார் நேரில் வந்து தனது ஆதரவு தெரிவித்தார். அப்போது வரலட்சுமி சரத்குமார் பேசியது :

    பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் வகையிலும் பெண்களுக்கு நீதி கிடைக்கவும் தாலுக்காக்கள் தோறும் பெண்கள் நீதிமன்றம் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும்.மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை வெறும் போராட்டமாக பார்க்காமல், விவசாயகிகளின் துயரத்தை எடுத்து சொல்லும் பிரச்சாரமாக பார்க்கவேண்டும்.

    மேலும் பெண்கள் பாதுகாப்பிற்காக சேவ் சக்தி என்ற அமைப்பை தொடங்கியுள்ளேன். இந்த இயக்கத்தின் மூலமாக வருகிற 8ம் தேதி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளோம். மேலும் இதன் மூலமாக தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    English summary
    Actress Varalakshmi Sarathkumar supports student protest in Valluvar kottam, Chennai. She demands Govt shoud take action on every taluk should have Mahila Court against for those who attack woman
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X