Varalaxmi :ஷங்கர் பட வாய்ப்பை மிஸ் செய்த வரலட்சுமி.. அவரோட அப்பா தான் காரணமாம்!
சென்னை :நடிகை வரலட்சுமி விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவரது போல்டான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
தன்னுடைய முதல் படத்திலேயே நடிகர் சிம்புவுடன் இணைந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்திருந்தார்.
மிகவும் குண்டாக இருந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது தன்னுடைய எடையை சிறப்பாக குறைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஷங்கர் பட வாய்ப்பை மிஸ் செய்த வரலட்சுமி : நடிகை வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய முதல் படத்திலேயே நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார் வரலட்சுமி. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலிலும் சிறப்பாக அமைந்தது. சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் வரலட்சுமி. ஆனாலும் இவர் தன்னுடைய தந்தையுடன் தொடர்ந்து சிறப்பான தொடர்பில் இருக்கிறார்.

இந்நிலையில் ஷங்கரின் பாய்ஸ் படம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்புகளை தான் முன்னதாக மிஸ் செய்ததாகவும் அதற்கு தன்னுடைய தந்தை சரத்குமார்தான் காரணம் என்றும் வரலட்சுமி தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தன்னுடைய தந்தைக்கு தான் நடிப்பதில் விருப்பம் இல்லை என்றும் அதனால் அவர் அதை அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தான் முன்னதாகவே சினிமாத்துறைக்கு வந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இதுகுறித்து நடிகர் சரத்குமாரும் தன்னுடைய விளக்கத்தை கொடுத்துள்ளார். வரலட்சுமி நடிக்க வருவது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தன்னை மீறிதான் அவர் தற்போது நடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு படத்திலாவது நடிக்கட்டும் என்று தன்னுடைய முதல் மனைவியும் ராதிகாவும் வந்து வற்புறுத்தியதால் தான் வரலட்சுமி நடிக்க சம்மதித்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
போடா போடி படம் வரலட்சுமிக்கு சிறப்பாக கைகொடுத்த நிலையில், அவர் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். குண்டாக இருந்த அவர் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து இளம் ஹீரோயின் லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தொடர்ந்து முன்னணி இயக்குநர்கள் இயக்கத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். விஜய்யுடன் சர்க்கார் படத்தில் வில்லியாக மிரட்டலான கேரக்டரில் நடித்திருந்தார் வரலட்சுமி.
இதேபோல பாலா இயக்கத்திலும் தாரை தப்பட்டை படத்திலும் இணைந்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் இவர் நடித்து வருகிறார். தமிழில் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்களிலும் தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்திலும் கன்னடத்திலும் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். 38 வயதான இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் மெனக்கெட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











