Varalaxmi Sarathkumar: மருமகனுக்கு சிக்ஸ் பேக்ஸை தூக்கிக் காட்டும் சரத்குமார்.. ஓவர் சேட்டை போலயே!
சென்னை: இன்றைக்கு அதாவது ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரபலங்கள் தங்களது தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தைக்காக ஸ்பெஷல் வீடியோ எடிட் செய்து தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பலராலும் விரும்பப்படும் நடிகை. கொழு பொம்பை போன்று இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் வரலட்சுமி சரத்குமார் தனது திராவிட நிறத்தால் ரசிகர்களின் அன்பைப் பெற்று வருகிறார். வரலட்சுமி ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றாலே இவருக்காகவே படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் திரையரங்கிற்கு செல்லும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இவரது திருமணத்தின் போது மொத்த திரையுலகமும் தமிழ்நாடு அரசியல் தலைவர்களும் திரண்டு சென்று வாழ்த்தினார்கள். இவரது திருமணத்தை வரலட்சுமியின் தந்தையும் நடிகருமான சரத்குமார் மிகவும் பிரமாண்டமாக நடத்தினார். சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவி சாயாவுக்கும் பிறந்தவர்தான் வரலட்சுமி சரத்குமார். ஆனால் இவர்கள் கடந்த 2000ஆம் ஆண்டே பிரிந்துவிட்டார்கள். அதன் பின்னர் சரத்குமார் ராதிகவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். வரலட்சுமி சரத்குமார் தனது மகள் இல்லை என்றாலும் வரலஷ்மியின் திருமண ஏற்பாடுகள் தொடங்கி அதன் பின்னர் வரை அனைத்திலும் முன்னின்று நடத்தி வைத்தார் ராதிகா.

வரலட்சுமி சரத்குமார்: இன்று தந்தையர் தினம் என்பதால் வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரத்குமாருக்காக ஸ்பெஷல் வீடியோ தயாரித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, சரத்குமாருடன் அவர் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்களில் இருந்து அவ்வப்போது எடுத்த புகைப்படங்கள் வீடியோக்கள் என பலவற்றை இணைத்து வீடியோவாக உருவாக்கி அதனைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சேட்டை சரத்குமார்: அந்த வீடியோவில், சரத்குமார் உடற்பயிற்சி செய்வது, சாப்பாடு சாப்பிடுவது, நடனம் ஆடுவது, விளையாடுவது, மருமகனோடு நின்று கொண்டு சிக்ஸ் பேக்ஸ் காட்டுவது என சரத்குமாரின் சேட்டை முகத்தை இந்த வீடியோவில் தொகுத்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். இந்த வீடியோவுக்கு, " தந்தையர் தின வாழ்த்துகள். நீங்கள் எனக்கு மட்டுமல்ல நூறுக்கும் மேற்பட்டோருக்கு அப்பா. எங்க எல்லோருக்கும் உங்களிடம் இருக்கும் குழந்தைத்தனம் தான் அப்பா ரொம்பவும் பிடித்திருக்கு. நீங்கள் எல்லோருடைய ரீல் மற்றும் ரியல் ஹீரோ. லவ் யூ அப்பா" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தனுஷ்: இதேபோல் நடிகர் தனுஷ் தனது அப்பாவான கஸ்தூரி ராஜாவுக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். தனுஷ் தனது அப்பாவுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், " இன்று நான் இவ்வளவு உயரத்தில் இருக்க பல தியாகங்களை செய்த உங்களைப் பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது அப்பா என்னுடைய ஹீரோ. தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











