கொரோனா அவர்களால் பரவாது.. தயவு செய்து செல்லப் பிராணிகளை கைவிடாதீர்கள்.. பிரபல நடிகை கெஞ்சல்!

சென்னை: கொரோனா வைரஸ் செல்லப் பிராணிகளால் பரவாது எனவே அவற்றை கைவிடாதீர்கள் என நடிகை வரலக்ஷ்மி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

Save Street Dogs | Namitha humble request | Tamannah Tips

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர தாண்டவத்தை ஆரம்பித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐ நெருங்கி வருகிறது. இதனால் மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

செல்ல பிராணிகள்

செல்ல பிராணிகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் செல்லப்பிராணிகளால் கொரோனா வைரஸ் பரவுவதாக பரவிய வதந்தியால் அச்சமடைந்த மக்கள் தங்களின் செல்ல பிராணிகளை கைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வராது

கொரோனா வராது

இந்நிலையில் இதுகுறித்து நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செல்லப் பிராணிகளால் கொரோனா வைரஸ் பரவாது. அவற்றை தயவு செய்து கைவிடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வெளியில் உள்ள விலங்குகளுக்கும் உணவளியுங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அநாதையாக விடாதீர்கள்

அநாதையாக விடாதீர்கள்

நான் சொல்வதை கேட்டு, உடனே ஒரு குரூப் எங்களுக்கே சாப்பாடு இல்லை என வந்துவிடும் என்ற அவர், நான் எல்லாருக்கும் சொல்லவில்லை. முடிந்தவர்கள் வெளியில் உள்ள விலங்குகளுக்கு உணவும் தண்ணீரும் கொடுங்கள் அவற்றை அநாதையாக விடாதீர்கள் என கெஞ்சி கேட்டிருக்கிறார்.

21 நாட்கள் ஊரடங்கு

நடிகை வரலட்சுமி சரத்குமார் சமூக அக்கறையுடன் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் மக்களும் அதனை உணர்ந்து பொறுப்புடன் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X