நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு.. வீடியோ மூலம் உறுதி செய்தார்!
சென்னை : நடிகை வரலட்சுமி சரத்குமார் தேர்ந்தெடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.
Recommended Video
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கு கொரோனா பாதித்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார்
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சிம்புவுடன் போடா போடி என்ற படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்தான் இவர் முதல்முறையாக தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு வரவேற்பை பெற்றது.

அடுத்தடுத்த படங்கள்
இதையடுத்து விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, மாரி 2, சண்டக்கோழி 2, சர்தார் போன்ற படங்களில் சிறப்பான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்திருந்தார். குறிப்பாக விஜய்யுடன் இவர் நடித்திருந்த சர்தார் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இதில் இவரது அரசியல் மூவ்மெண்ட்கள் சிறப்பாக அமைந்தன.

சிறப்பான வில்லி கேரக்டர்
நாயகியாக, குணச்சித்திர கேரக்டர்களில் மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் இவர் சிறப்பாக நடித்து வருகிறார். வில்லி கதாபாத்திரங்கள் இவருக்கு சிறப்பாக பொருந்துகின்றன. தற்போது தமிழில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

திருமணம் செய்யாத வரலட்சுமி
37 வயதாகும் இவருக்கு திருமணம் செய்து வைக்க இவரது குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இவர் பிடி கொடுக்காமல் நழுவி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ராதிகா தன்னுடைய அம்மா இல்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

வரலட்சுமிக்கு கொரோனா பாதிப்பு
இந்நிலையில் தற்போது இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து வரலட்சுமி சரத்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் முன்னெச்சரிக்கையுடன் இருந்த போதிலும் தனக்கு கொரோனா பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

வீடியோ மூலம் உறுதி
நடிகர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர்களான தாங்கள் மாஸ்க் அணிவதில்லை என்றும் கூறியுள்ளார். இங்கு கோவிட் பாதிப்பு இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள அவர், அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்
மேலும் கடந்த சில தினங்களில் தன்னை சந்தித்தவர்கள், கண்டிப்பாக கோவிட் அறிகுறிகளை கவனித்து பரிசோதனை செய்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். தற்போது கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











