கல்யாண வேலைகளுக்கு நடுவே தளபதிக்கு வாழ்த்து சொன்ன வரலஷ்மி.. ஃபோட்டோஸ் மாஸா இருக்கே!

சென்னை: நடிகர் விஜய் இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக, தனது கட்சிக்காரர்களை பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபடவேண்டாம் எனவும் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும்படியும் உத்தரவிட்டிருந்தார். இதனால் விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு செய்யப்பட்ட முன் ஏற்பாடுகள் அனைத்தும் அப்படியே கைவிடப்பட்டது.

ஆனாலும் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள தி கோட் படத்தின் அப்டேட்டுகளை மாறி மாறி படக்குழு வெளியிட்டு வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், இன்று சின்ன சின்ன கண்ணே பாடலும் வெளியாகவுள்ளது. இந்த பாடலை விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி பாடியுள்ளனர். பவதாரிணியின் குரல் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Actress Varalaxmi Sarathkumar Wishes Vijay 50th Birthday With New Photos

மேலும் விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட கத்தி, துப்பாக்கி, போக்கிரி, கில்லி, மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இதனை ரசிகர்கள் கொண்டாடிய வீடியோக்களும் இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கின்றன. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

கமல் வாழ்த்து: ஏற்கனவே, நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன், “ அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரும் கடைசியாக வெளியான விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்தனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்கள் எல்.சி.யூ., என்ற பெயரில் வெளிவந்தது.

வரலஷ்மி வாழ்த்து: அதேபோல் நடிகையும் நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலஷ்மி சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில், விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துகொண்டு, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துக் குறிப்பில், “ ஹேப்பி பர்த் டே டூ அவர் ஒன் அண்ட் ஒன்லி தளபதி. வி லவ் யூ என தெரிவித்துள்ளார்.

வரலஷ்மிக்கு திருமணம்: விஜய்யும் வரலஷ்மி சரத்குமாரும் சர்கார் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் வரலஷ்மி சரத்குமார் தற்போது தனது திருமண ஏற்பாடு வேலைகளில் மிகவும் பிசியாக இருக்கின்றார். தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களையும், அரசியல் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். நேற்று அல்லு அர்ஜுனுக்கு அழைப்பிதழை தனது வருங்கால கணவருடன் சேர்ந்து கொடுத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X