Varalaxmi Sarathkumar: மிரட்டலான வரலட்சுமி போஸ்டர்.. அட இவங்களும் ராயன் படத்துல இருக்காங்களா!
சென்னை: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்களின் வெற்றி அவரது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ப பாண்டி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் கமிட்மெண்ட்களால் இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தார் தனுஷ். இருந்தபோதிலும் அவருக்குள் இருந்த இயக்குநர், எப்போ பாஸ் என்று கேட்டு கொண்டிருந்தது. ரசிகர்களும்தான். இதனால் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து கிடைத்த கேப்பில் அடுத்தடுத்த இரு படங்களை இயக்கியுள்ளார். இதில் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள டி50 படத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ராயன் என்று பெயரிட்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது ராயன் படம். கேங்ஸ்டர் கதைக்களத்தில் பேமிலி சென்டிமெண்டையும் சேர்த்து இந்தப் படத்தை சிறப்பாக்கியுள்ளார் தனுஷ். படத்தில் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ், சந்தீப் கிஷன், பிரகாஷ்ராஜ், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து இவர்களின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார் தனுஷ். கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் இந்தப் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக இம்ப்ரஸ் செய்து வருகிறார். இன்றைய தினம் யார் என்ற கேள்விக்கும் தற்போது விடை கிடைத்துள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர். ஒரு சில படங்களிலேயே தான் நடிப்பு அசுரன் என்பதை புலப்படுத்தினார். தொடர்ந்து தனுஷின் நடிப்பில் அடுத்தடுத்து வித்தியாசமான ஜானர்களில் படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தான் கமர்ஷியல் படங்களிலும் மாஸ் காட்ட முடியும் என்பதையும் தனுஷ் தொடர்ந்து நிரூபித்தார். அடுத்தடுத்து தனுஷின் நடிப்பிற்கு தீனி போடும்வகையில் அசுரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. இந்நிலையில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்ற பன்முகத் திறமைகளுடன் கோலிவுட்டில் வலம் வந்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.
இயக்குநர் தனுஷ்: தனுஷின் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ப பாண்டி என்ற படம் ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி, டிடி உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க வெளியானது. வயதை கடந்த காதலை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகி, வயதானவர்களின் ஏக்கத்திற்கு வடிகாலாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த தன்னுடைய படங்களின் கமிட்மெண்ட்களால் தொடர்ந்து தனுஷுக்குள் இருந்த இயக்குநர் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த இயக்குநர் தட்டி எழுப்பப்பட்டுள்ளார். அவரது இயக்கத்தில் அடுத்தடுத்து ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களை இயக்கியுள்ளார்.

ராயன் படம்: இதில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ளது ராயன் படம். இந்தப் படத்தில் ரோட்டோர உணவுக்கடை நடத்தி வருபவராக தனுஷ் நடித்துள்ளதாக தெரிகிறது. அவரது தம்பிகளாக காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் இணைந்துள்ளனர். படத்தில் தனுஷின் பழைய வாழ்க்கை, கேங்ஸ்டர் வாழ்க்கை வெளிப்படும்போது குடும்பத்தினரின் அதிர்ச்சி மற்றும் அதன் காரணமாக ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை தனுஷ் வெளியிட்டு வருகிறார்.
வரலட்சுமி சரத்குமார் போஸ்டர்: கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர் வெளியிட்ட நிலையில், அடுத்தடுத்து படத்தின் மற்ற கேரக்டர்களின் லுக்கையும் போஸ்டர்களாக தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அந்த வரிசையில் இன்றைய தினம் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. முந்தைய போஸ்டர்களை போலவே இந்த போஸ்டரும் கருப்பு வெள்ளையாகவே வெளியாகியுள்ளது. இதன்மூலம் தனுஷ் என்ன சொல்ல வருகிறார் என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக தனுஷ், சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் இணைந்திருந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் அடுத்தடுத்து எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி ஆகியோரின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











