'போதையில் அடி உதை.. விவாகரத்து கேட்டு தினமும் டார்ச்சர்'.. கணவர் மீது பிரபல நடிகை வழக்கு!

By

கட்டாக் : தனது கணவர் குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவதாக நடிகை ஒருவர், வழக்குத் தொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

தல ரகசியமா SOCIAL MEDIAல இருக்காரு | ACTRESS PRIYADARSHINI REVEAL THE SECRET | FILMIBEAT TAMIL

பிரபல ஒடிஷா நடிகை வர்ஷா பிரியதர்ஷினி. இவர் ஒடிஷாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அங்கு முன்னணி நடிகையாக இருக்கும் அவர் சில பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார்.

அனுபவ் மொகந்தி

அனுபவ் மொகந்தி

இவரும் பிரபல ஒடிஷா நடிகருமான அனுபவ் மொகந்தியும் சில படங்களில் ஒன்றாக நடித்த போது காதலில் விழுந்தனர். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நடிப்போடு அரசியலிலும் ஈடுபட்டு வந்த அனுபவ் மொகந்தி, நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

கொடுமைப் படுத்துவதாக

கொடுமைப் படுத்துவதாக

இப்போது அந்தக் கட்சியின் மக்களவை உறுப்பினராகவும் அங்கு கட்சியின் துணை கொறடாவுமாக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகும் அனுபவும் வர்ஷாவும் சில படங்களில் இணைந்து நடித்து வந்தனர். இந்நிலையில், அனுபவ் மொகந்திக்கு தன்னை கொடுமைப் படுத்துவதாக, அவரது மனைவி வர்ஷா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சித்ரவதை செய்கின்றனர்

சித்ரவதை செய்கின்றனர்

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அனுபவ் மொகந்தி குடிகாரர், குடித்துவிட்டு என்னை அடித்து உதைப்பார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்குப் பின், அனுபவ் மொகந்தியும் அவரது குடும்பத்தினரும் சித்ரவதை செய்யத் தொடங்கினர். அவர்கள் சித்ரவதை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

நஷ்ட ஈடாக

நஷ்ட ஈடாக

விவாகரத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். என்னை மீண்டும் சினிமாவில் நடிக்கக் கூடாது என்றும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கொடுமை படுத்துகின்றனர். அறுவெறுப்பாக திட்டுகின்றனர். என்னை மிரட்டுகின்றனர். நான் படங்களில் நடித்திருந்தால், எனக்கு வருமானம் கிடைத்திருக்கும். எனக்கு நஷ்ட ஈடாக, 15 கோடி ரூபாயை அனுபவ் வழங்க வேண்டும்.

நோட்டீஸ் வரவில்லை

நோட்டீஸ் வரவில்லை

வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக, மாதம் 70 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தனக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை என்றும் இதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று அனுபவ் மொகந்தி கூறியுள்ளார். இந்த விவகாரம் ஒடிஷாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X