கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகை வேதிகா!
சென்னை : மதராஸி படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை வேதிகா.
பரதேசி,காவியத்தலைவன்,முனி காளை, காஞ்சனா 3 என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
அதீத கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களிடையே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் நடிகை வேதிகா வும் தடுப்பூசி போட்டுக் கொண்ட அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிளாக்பஸ்டர் ஹிட்
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகை வேதிகா தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராஸி படத்தில் நடித்து அறிமுகமான வேதிகா அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த முனி படத்தில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமானார்.

அந்தஸ்தை பெற்று
பின் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த பரதேசி மற்றும் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான காவியத் தலைவன் போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகச் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இரு படங்களுக்கும் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் வென்றார்.
Recommended Video

இரு மொழிகளிலும்
தமிழை தொடர்ந்து மலையாளம, கன்னடம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து அங்கும் பிரபலமாக உள்ள வேதிகா தமிழில் கடைசியாக காஞ்சனா 3ல் நடித்திருந்தார் . தற்போது வினோதன் என்ற படத்தில் நடித்து வருகிறார் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதை முடித்த கையோடு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் ஜங்கிள் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விழிப்புணர்வு வீடியோ
இந்தியாவில் பரவிவரும் கொரோனா இரண்டாவது அலை மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பல உயிர்ச் சேதங்களும் நாளுக்கு நாள் ஏற்பாட அரசு அனைவரையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் திரை பிரபலங்கள் என பலரும் இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினாலும் பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசியின் மீதான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை அதனைப் போக்கும் வகையில் பல திரைப் பிரபலங்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக் கொள்கின்றனர் அந்த வகையில் நடிகை வேதிகா இப்பொழுது தடுப்பூசியை செலுத்திக்கொண்ட வீடியோவை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications