90ஸ் கவர்ச்சி நடிகை ‘மடிப்பு அம்சா‘… இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
சென்னை : தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டும் என்றும் மனதை விட்டு மறைய மாட்டார்கள். அப்படி மறையாத நடிகை தான் விசித்ரா.
90களில் கொடி கட்டி பறந்த விசித்ரா, 90ஸ் கிட்டுகளின் கனவு குயினாக இருந்தார்.
அம்சமான இடை உடைய இவரை, 'மடிப்பு அம்சா' என வர்ணித்து மயங்கியவர்களே ஏராளம். நீண்ட நாட்களாக திரையில் தென்படாத இந்த நடிகை இப்போ எப்படி இருக்கங்கனு பார்க்கலாமா...

விசித்ரா
கவர்ச்சி கன்னியாக அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா ஆகியோர் பேசப்பட்டனர். இவர்கள் காலத்துக்கு பின் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் விசித்ரா. இவர், சின்னத்தாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ரம்யா பாண்டியேனுக்கே டஃப்
தலைவாசல் படத்தில், மடிப்பு அம்சா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பேசப்பட்டார். அவரை ரசிகர்கள், மடிப்பு அம்சா என்று செல்லமாக அழைக்கிற அளவுக்கு பிரபலமானார். நம்ம விசித்ரா மட்டும் இப்போ சினிமாவில் இருந்து இருந்தால், இடையழகி ரம்யா பாண்டியேனுக்கே டஃப் கொடுத்து இருப்பார் என்று சொல்லலாம்.

காமெடியில்
கவர்ச்சி மட்டும் இல்லீங்க காமெடியும் வரும் என்பதை பலத் திரைப்படங்களில் நிரூபித்து இருப்பார். பொண்ணு வீட்டுக்காரன் திரைப்படத்தில் டயானா என்ற ஆங்கில டீச்சராக வந்து கவுண்டமணிக்கு ஆங்கிலம் கற்றுகொடுத்து வயிறு வலிக்க சிரிக்கவைத்து இருப்பார்.

குணச்சித்திர நடிகை
காமெடி கலந்த கவர்ச்சி நடிகையாக ஒரு புது ரூட்டில், விசித்ரா பயணித்தார். அவரை காமெடியும், கவர்ச்சியும் கலந்த குணச்சித்திர நடிகையாக காட்டியவர் சத்யராஜ். இவர் இயக்கிய வில்லாதி வில்லன் படத்தில், விசித்ராவை குணச்சித்ர நடிகையாகவும் பார்க்க முடிந்தது.

மார்க்கெட்இல்லை
வில்லாதி வில்லனுக்கு பிறகு விசித்ரா திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பெரும்பாலான நடிகைகள் மார்க்கெட் இழப்பது போல் விசித்ராவும் மார்க்கெட் இழந்தார். பல வருடங்களாக காணாமல் போன நடிகைகள் பட்டியலில் இருந்த அவர்,நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் சீரியலில் நடித்தார்.
Recommended Video

அதே கிக்க
பலரின் கனவு தேவதையாக வலம் வந்த மடிப்பு அம்சா, கலைத்துறையிலிருந்து விலகி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் இணையத்தில் மிகவும் ஆக்டிவாகவே இருக்கிறார் விசித்ரா. சமீபத்தில் தனது 50வது பிறந்த நாளை இவர் கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த யாரும் 50 வயசுனு சொல்ல முடியாத அளவுக்கு அதே கிக்குடன் இருக்கிறார் நம்ம மடிப்பு அம்சா.


Click it and Unblock the Notifications











