மடிப்பு அம்சாவை ஞாபகம் இருக்கா..ராணியாக மாறி விதவிதமான போஸ்.. லைக்ஸை அள்ளும் புகைப்படம்!
சென்னை : தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டும் என்றும் மனதை விட்டு மறைய மாட்டார்கள். அப்படி மறையாத நடிகை தான் விசித்ரா.
Recommended Video
90களில் கொடி கட்டி பறந்த விசித்ரா, 90ஸ் கிட்டுகளின் கனவு குயினாக இருந்தார். அம்சமான இடை உடைய இவரை, 'மடிப்பு அம்சா' என வர்ணித்து மயங்கியவர்களே ஏராளம்.
நீண்ட நாட்களாக திரையில் தென்படாத இந்த நடிகை இப்போ ராணியாக மாறி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

விசித்ரா
விசித்ரா என்பதைவிட மடிப்பு அம்சா என்றால் தான் 90ஸ் கிட்டுகளுக்கு நினைவுக்கு வரும். தலைவாசல் படத்தில், மடிப்பு அம்சா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பேசப்பட்டார். அந்த படத்திற்கு பிறகு ரசிகர்கள் அவரை, மடிப்பு அம்சா என்று செல்லமாக அழைத்தனர். நம்ம விசித்ரா மட்டும் இப்போ சினிமாவில் இருந்து இருந்தால், இடையழகி ரம்யா பாண்டியேனுக்கே டஃப் கொடுத்து இருப்பார் என்று சொல்லலாம்.

குணசித்திர நடிகையாக
சின்னத்தாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விசித்ராவுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது தலைவாசல். கவர்ச்சி மட்டும் இல்ல காமெடியும் தனக்கு வரும் என்பதை பலத் திரைப்படங்களில் நிரூபித்து இருப்பார். பொண்ணு வீட்டுக்காரன் திரைப்படத்தில் டயானா என்ற ஆங்கில டீச்சராக வந்து கவுண்டமணிக்கு ஆங்கிலம் கற்றுகொடுத்து வயிறு வலிக்க சிரிக்கவைத்து இருப்பார்.

சினிமாவை விட்டு விலகினார்
கவர்ச்சி, காமெடி, குணச்சித்திர நடிகை என 90 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த விசித்திரா. வில்லாதி வில்லன் திரைப்படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என செட்டிலானார். நீண்ட நாட்களாக எங்கு இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்த விசித்ரா படவாய்ப்புக்காக இல்லாவிட்டாலும் இணையத்தில் மிகவும் ஆக்டிவாகவே இருக்கிறார்.

ராணிபோல
தற்போது ராணிப்போல மாறி விதவிதமான போஸ் கொடுத்துள்ளார். சமீபத்தில் தனது 50வது பிறந்த நாளை இவர் கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த யாரும் இவருக்கு 50 வயசுனு சொல்ல முடியாத அளவுக்கு அதே கிக்குடன் இருக்கிறார் நம்ம மடிப்பு அம்சா. விசித்ராவின் புகைப்படத்திற்கு நம்ம 90ஸ் ரசிகர்கள் லைக்குகளை போட்டு, மீண்டும் சினிமாவுக்கு வாங்க என அழைப்பு விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











