17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் விசித்ரா.. ஆனா கறாரா இப்டி சொல்லிட்டாரே!
17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் வாய்ப்பு தேடி வருகிறார் நடிகை விசித்ரா.
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் நடிகை விசித்ரா.
90களில் தமிழில் கவர்ச்சியில் மட்டுமின்றி குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியவர் நடிகை விசித்ரா. தேவர்மகன், ரசிகன், முத்து, வீரா என இவர் நடித்த வெற்றிப்படங்கள் அதிகம்.

கடந்த 2002ம் ஆண்டு இரவு பாடகன் படத்தோடு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட விசித்ரா, திருமணமாகி கணவருடன் செட்டில் ஆனார். அவருக்கு தற்போது மூன்று மகன்கள் உள்ளனர். மைசூரில் கணவரோடு சேர்ந்து ஹோட்டல் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அதாவது 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பட வாய்ப்புகளைத் தேடும் பணியை அவர் தொடங்கியுள்ளார். இதற்காக தனியே ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், பழைய மாதிரி மீண்டும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க அவருக்கு ஆர்வம் இல்லையாம். தன்னுடைய உடல்வாகுக்கு ஏற்ற மாதிரி, போலீஸ் அல்லது தொழிலதிபர் போன்ற வேடங்களில் நடிக்க அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.
தற்போது தமிழ் சினிமாவில் பெண் வில்லிகளின் வரவு அதிகமாகி இருக்கிறது. மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ராதிகாகூட பெண் தாதாவாக நடிக்கிறார். விசித்ராவும் இது போன்ற பெண் தாதா, வில்லி போன்ற கதாபாத்திரங்களில் நடித்தால், அவரது நடிப்புத் திறமைக்கும் தீனியாக இருக்கும், தமிழ் சினிமாவிற்கும் புதிய பவர்புல் வில்லி கிடைப்பார். கொஞ்சம் அது பத்தியும் யோசிக்கலாமே மேடம்.


Click it and Unblock the Notifications











