BB7: குடும்ப வறுமையால் 16 வயதில் நடிக்க வந்த விசித்ரா.. பிக் பாஸ் வீட்டில் தாக்குபிடிப்பாரா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா போட்டியாளராக நுழைந்துள்ளார்.

பிக் பாஸ் 7 ஆவது சீசன் மிகவும் பிரமாண்டமாக தொடங்கி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வழக்கமாக ஒரே வீட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் நிலையில், இந்த முறை இரண்டு வீடு என்பதால், புதுசு ட்விஸ்ட்களும் புது டாஸ்க்குகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actress Vichitra speech in bigg boss tamil season 7 grand opening

போட்டியாளர்கள்: பிக் பாஸ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த நிலையில், முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்தார். இதையடுத்து, பூர்ணிமா ரவி, ரவீனா, பிரதீப், நிவிஷா, நிக்சன், மணி, அக்‌ஷ்யா, ஜோவிகா விஜயகு, ஆக்‌ஷயா, விஷ்ணு, ஆகியோர் எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

நடிகை விசித்ரா: இதையடுத்து 13 ஆவது போட்டியாளராக விசித்ரா நுழைந்து இருக்கிறார். 90களில் கவர்ச்சி கன்னியாக இருந்த இவர், தலைவாசல் படம் இடுப்பு மடிப்பு அம்சா என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்தனர். முத்து படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. திருமணத்திற்குப் பிறகு, சினிமாவை விட்டு விலகி இருந்த இவர். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில், மூன்றாவது ரன்னரானார்.

Actress Vichitra speech in bigg boss tamil season 7 grand opening

குடும்ப வறுமையால்: இதையடுத்து பிக் பாஸ் வீட்டுக்கு வந்த இவர், திருமணத்திற்கு பின் நான் படத்தில் நடிக்கவே இல்லை. குழந்தைகள் தான் என் வாழ்க்கை, அவர்களை நான் நன்றாக வளர்ந்து வருகிறேன். இப்போது பிக் பாஸ் வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதையடுத்து, கமல்ஹாசன் அவருக்கு பட்டம் படித்ததற்கான சான்றிதழை பரிசாக கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அவர், நான் 16 வயதில் குடும்ப வறுமை காரணமாக நடிக்க வந்துவிட்டதால், என்னால் படிக்க முடியாமல் போனது. இதனால், இப்போது என் ஆசை தீர்த்துக்கொள்கிறேன் என்றார்.

முதல் வாரத்திலேயே எவிக்ஷன்: எப்போது அமைதியாகவ இருக்கும் விசித்ரா எப்படி பிக் பாஸ் வீட்டில் சண்டை மத்தியில் இருக்க போகிறார் என்று தெரியவில்லை. பிக் பாஸ் வீட்டில் இளம் தலைமுறையினர் இருக்கும் நிலையில், இவர் முதல் வாரத்திலேயே வெளியேறவும் வாய்ப்பு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X