விவாகரத்து கோரும் நடிகை விந்தியா
சென்னை: பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை விந்தியா மனு தாக்கல் செய்தார்.
நடிகை விந்தியாவுக்கும் கோபி என்ற கோபாலகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு குருவாயூரில் திருமணம் நடந்தது. நடிகை பானுப்ரியாவின் தம்பி இந்த கோபி என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணமான கொஞ்ச காலத்துக்குள் கணவர் தன்னை கொடுமைபடுத்துவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் விந்தியா விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.
அதன் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் விந்தியாவும் கோபியும் திங்கள்கிழமை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள மனு தாக்கல் செய்தனர்.
விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications
