Jailer 2: தலைவர் படத்தில் வித்யா பாலன்.. நெல்சன் ஒரு முடிவோடதான் இருக்காரு போல!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் ஜெயிலர் 2. இந்த படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் அடுத்த பாகம். படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என பலரும் நடித்திருந்தார்கள். தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கினார். முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததை அடுத்து, இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினியின் திரை வாழ்க்கையில் ஜெயிலர் மிகவும் முக்கியமான படம். அவரது மாஸ், அவரது ஸ்டைல் என அனைத்தையும் கச்சிதமாக பயன்படுத்த பக்காவான திரைக்கதை அமைத்து படமாக்கினார் நெல்சன். படத்தின் தரத்தையும் தலைவரின் மாஸையும் பல மடங்கு கூட்டி வைத்தார். படம் திரையரங்கில் வெற்றி வாகை சூடியது. இப்படி இருக்கும்போது இந்த படத்தில் ரஜினிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ, அதேபோல், மோகன்லால், சிவராஜ் குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப்க்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ரசிகர்கள் திருவிழா: ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் ரஜினிக்கு பதிலாக ஏ.ஐ. காட்சிகளை பயன்படுத்தாமல் அவரையே நடிக்க வைத்தது எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக ஒர்க்-அவுட் ஆனது. மொத்தத்தில் படம் ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது. இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாகவே கேரளாவில் நடைபெற்று வருகிறது.
வித்யா பாலன்: இரண்டாம் பாகத்தின் கதைக்களம் கேரளாவை மையப்படுத்தியது என்று கூறப்படுகிறது. அதனால்தான் படப்பிடிப்பு பணிகள் கேரளாவில் நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது. அதாவது இந்த படத்தில் மோகன் லாலின் கதாபாத்திரமான மேத்யூ கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் வித்யா பாலன் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. பலரும் அவர் மோகன் லாலின் மனைவியாக நடிக்கிறார் என்றும் கூறிவருகிறார்கள். ஆனால் இந்த தகவலை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











