நடிகை வித்யா பிரதீப்புக்கு ஆண் குழந்தை பிறந்தது., குழந்தையின் அழகான புகைப்படம் வெளியிட்டு உற்சாகம்!

சென்னை: சின்னத்திரை மற்றும் சினிமா என அடுத்தடுத்த தளங்களில் தன்னை வெளிப்படுத்தி வருபவர் நடிகை வித்யா பிரதீப். கடநத் 2010ம் ஆண்டு முதல் நடித்துவரும் வித்யா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான தடம் படம் முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது.

சின்னத்திரையிலும் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார் வித்யா பிரதீப். சன் டிவியின் அழகி சீரியல் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் தனக்கும் மைக்கேல் என்பவருக்கும் திருமணமான விஷயத்தை கடந்த ஜூலை மாதத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்திருந்தார்.

vidya pradeep michael tamil cinema

நடிகை வித்யா பிரதீப்: நடிகை வித்யா பிரதீப் சின்னத்திரை மற்றும் சினிமாவில் அடுத்தடுத்து லீட் கேரக்டர்களில் நடித்து வருபவர். இவர் கடந்த 2010ம் ஆண்டிலிருந்து சினிமாவில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டில் வெளியான தடம் படத்தில் இவரது கேரக்டர் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சன் டிவியில் இவர் நாயகியாக நடித்த அழகி சீரியல் ரசிகர்களிடையே அதிகமான கவனத்தை பெற்று சிறப்பாக அமைந்தது. சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றாக இந்தத் தொடர் அமைந்திருந்தது. அதிகமான டிஆர்பியையும் சேனலுக்கு பெற்றுத் தந்தது. சீரியலில் வித்யா பிரதீப் அதிரடி காட்டியிருப்பார்.

வித்யா பிரதீப் & மைக்கேல் ஜோடி: இந்நிலையில் தனக்கும் மைக்கேல் என்பவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கடந்த ஜூலை மாதத்தில் வித்யா பிரதீப், இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிவித்திருந்தார். மேலும் தங்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருமணம் நடந்து முடிந்ததாகவும் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். இதையடுதது கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய கர்ப்பகால போட்டோஷூட்டையும் அவர் வெளியிட்டிருந்தார். இதில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் தற்போது வித்யா பிரதீப் -மைக்கேல் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.


வித்யா பிரதீப்பிற்கு ஆண்குழந்தை: இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்த விஷயத்தை குழந்தையின் புகைப்படத்துடன் அவர் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். அவருக்கு நடிகை வாணி போஜன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 13 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் மைக்கேலை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட வித்யா, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இதை சமூக வலைதளப்பக்கம் மூலம் அறிவித்திருந்தார். விருந்தாளி என்ற படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மைக்கேல் ஈஸ்வரை தான் வித்யா திருமணம் செய்துள்ளார்.

திருமணத்தை அறிவித்த வித்யா: திருமணத்திற்கு பின்பே பயோடெக்னாலஜி படிப்பை முடித்த வித்யா, அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இடையில் அழகி சீரியலிலும் இவர் நடித்து மிகப்பெரிய ரீச்சை பெற்றுள்ளார். சைவம், பசங்க 2 என அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சீரியல்தான் சிறப்பாக கைக்கொடுத்தது. இவருக்கு திருமணமான விஷயமே அதிகமான ரசிகர்களுக்கு தெரியாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணத்தை அறிவித்து தற்போது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். வித்யாவிற்கு கடந்த நவம்பர் மாதத்தில் சீமந்தம் நடைபெற்றது. இதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X