மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாட்டம்.. பிகினியில் போட்டோ ஷூட்.. அதகளப்படுத்தும் நடிகை வித்யுலேகா!
சென்னை: பிரபல நடிகையான வித்யுலேகா ராமனின் பிகினி போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீதானே என் பொன் வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வித்யுலேகா ராமன்.
இந்தப் படத்தில் சமந்தாவின் தோழியாக ஜெனி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் வித்யுலேகா. இதன் மூலம் பெரும் பிரபலமானார்.

பல படங்கள்
இதன் தெலுங்கு வெர்ஷனிலும் வித்யுலேகாவே நடித்திருந்தார். தொடர்ந்து தீயா வேலை செய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், மாலினி 22 பாளையம்கோட்டை, புலி, வேதாளம், மாப்ள சிங்கம், வாகா, மீண்டும் ஒரு காதல் கதை, சரவணன் இருக்க பயமேன், பஞ்சு மிட்டாய் என பல படங்களில் நடித்துள்ளார்.

பெரும் ரசிகர் பட்டாளம்
தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ளார் வித்யுலேகா ராமன். சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த குறைந்த நாட்களிலேயே 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குண்டான உடம்பு, அப்பாவியான முகம், துறுதுறு பார்வை என தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் வித்யுலேகா.

கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சஞ்சய் என்பவருடன் வித்யுலேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தனது நிச்சயதார்த்தம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார் வித்யுலேகா. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி வித்யுலேகா - சஞ்சய் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர்.

பிகினி போட்டோஸ்
இதனை தொடர்ந்து புது மண தம்பதிகள் மாலத்தீவுக்கு ஹனி மூன் சென்றனர். மாலத்தீவு சென்றது முதலே அங்கு எடுத்த போட்டோக்களை எல்லாம் வித்யுலேகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினியில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் வித்யுலேகா.

ஹாட்னஸ் ஓவர் லோடட்
மஞ்சள் நிற பிகினியில் கடலில் அமர்ந்தப்படி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஹாட்னஸ் ஓவர்லோடட் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், நீங்களும் ஏன் இப்படி இறங்கி விட்டீற்கள் என்றும் என்று கேட்டு வருகின்றனர். வித்யுலேகா - சஞ்சய் திருணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











