கொரோனா லாக்டவுனில்.. நடிகை வித்யுலேகா ராமன் திருமண நிச்சயதார்த்தம்.. வாழ்த்தும் நடிகர், நடிகைகள்!
சென்னை: பிரபல காமெடி நடிகை வித்யுலேகா ராமன் திருமண நிச்சயதார்த்தம் லாக்டவுனில் நடந்துள்ளது.
பிரபல காமெடி நடிகை வித்யுலேகா ராமன். இவர், பிரபல நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய, நீதானே என் பொன்வசந்தம் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

சமந்தாவின் தோழி
இந்தப் படம் தெலுங்கிலும் உருவானது. அதிலும் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார் வித்யுலேகா. தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், சந்தானம் நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு, விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம், வேதாளம், தனுஷின் பவர் பாண்டி, பஞ்சுமிட்டாய் உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.

எடை குறைத்த அனுபவம்
தெலுங்கிலும் முன்னணி ஹீரோ படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் இவர் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வித்யுலேகா, தான் உடல் எடையை குறைத்த அனுபவம் பற்றி கடந்த சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பரபரப்பாகப் பதிவிட்டிருந்தார்.

நிச்சயதார்த்தம்
வாரத்துக்கு 6 முறை உடற்பயிற்சி, சரியான சாப்பாடு. எந்த ரகசிய மருந்தும் மாத்திரையும் கிடையாது. கடின உழைப்பு மட்டுமே போதும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு சஞ்சய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

மாஸ்க் அணிந்து
இதுபற்றி அவர், 'கடந்த 26 ஆம் தேதி எங்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நாங்கள் அனைவரும் மாஸ்க் அணிந்தே இந்த விழாவில் கலந்து கொண்டோம். இப்போது போட்டோவுக்காக அதை நீக்கி இருக்கிறோம். உங்கள் அன்பும் வாழ்த்துக்களுக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.

கீதாஞ்சலி செல்வராகவன்
இதையடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகை ரெஜினா காஸண்ட்ரா, தேஜஸ்வி மடிவாடா, நபா நடேஷ், ராஷி கண்ணா, நிதி அகர்வால், ஜனனி ஐயர், எடிட்டர் சுரேஷ், பாயல் ராஜ்புத், தீப்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வித்யுலேகாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, வித்யுலேகாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

ராணா திருமணம்
கொரோனா லாக்டவுன் பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்துகொண்டனர். தெலுங்கு நடிகர் நிதின், நடிகர் ராணா டக்குபதி, நடிகை பிராச்சி தெஹ்லான், 'பாபநாசம்' நடிகர் ரோஷன் பஷீர், நடிகை ஷாலினி வட்னிகட்டி உள்பட பலர் திருமணம் செய்துகொண்டனர். நடிகை மியா ஜார்ஜின் திருமண நிச்சயதார்த்தம் லாக்டவுனில் நடித்துள்ளது. ஆரவ் திருமணம் 6 ஆம் தேதி நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











