இந்த காமெடி நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பட்டனை கழட்டிவிட்டு ஹாட் போஸ் கொடுத்த வித்யுலேகா!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகையான வித்யுலேகா ராமன், சட்டை பட்டனை கழட்டி விட்டு செம ஹாட்டாய் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ இன்ஸ்டாகிராமை கதறவிட்டு வருகிறது.

நீதானே என் பொன் வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். இந்தப் படத்தில் சமந்தாவின் தோழியாக ஜெனி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் வித்யுலேகா.

இதன் தெலுங்கு வெர்ஷனிலும் வித்யுலேகாவே நடித்திருந்தார். தொடர்ந்து தீயா வேலை செய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், என படங்களில் நடித்துள்ளார்.

ரசிகர் பட்டாளம்

ரசிகர் பட்டாளம்

தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ளார் வித்யுலேகா ராமன். சினிமாவில் அடியெடுத்து வைத்த சொற்ப நாட்களிலேயே 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குண்டான உடம்பு, அப்பாவியான முகம், துறுதுறு நடிப்பு என தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் வித்யுலேகா.

எடை குறைப்பு

எடை குறைப்பு

வித்யுலேகா ராமன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்த தகவலும் அரசல் புரசலாக கூட இதுவரை வெளியாகவில்லை. இந்த லாக்டவுன் நேரத்தில் தீயாய் உடற்பயிற்சி செய்த வித்யுலேகா, கடந்த 6 மாதத்தில் 30 கிலோ வரை எடையை குறைத்து சிக்கென ஆகியிருக்கிறார்.

வித்யுலேகாவா இது?

வித்யுலேகாவா இது?

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள வித்யுலேகா தான் குண்டாக இருந்த போட்டோவையும் தான் உடல் எடையை குறைத்த போட்டோவையும் ஷேர் செய்து ரசிகர்களை மிரள விட்டார். நம்ம வித்யுலேகாவா இது என்று கேட்கும் அளவுக்கு ஸ்லிம்மாகவும் க்யூட்டாகவும் மாறினார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

எடையை குறைத்து முதல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார் வித்யுலேகா. வித்யுலேகாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சஞ்சய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவரது நிச்சயதார்த்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

பட்டனை கழட்டிவிட்டு

பட்டனை கழட்டிவிட்டு

இந்நிலையில் நடிகை வித்யுலேகாவின் ஹாட் போட்டோஸ் இணையத்தை திணறடித்து வருகிறது. குட்டியான கிழிந்த மாடல் ட்ரவுசர் சட்டையில் போஸ் கொடுத்துள்ளார். அதில் ஹைலைட்டே அவர் அணிந்திருக்கும் சட்டைதான். சட்டையின் மேல் பகுதியில் உள்ள சில பட்டன்களை கழட்டி விட்டு சட்டையையும் விலக்கி சூட்டை கிளப்பியிருக்கிறார்.

டஃப் கொடுக்கும் வித்யு

டஃப் கொடுக்கும் வித்யு

முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உள்ளது அவரது போட்டோ ஷுட். இதில் ஹாஃப், ஃபுல், ஷார்ட், லாங், க்ளோஸப் என பல கோணங்களில் எடுத்து தள்ளியிருக்கிறார் வித்யுலேகா. அவரது இந்த போட்டோ ஷுட்டை பார்த்த நெட்டிசன்கள் பலர் வாவ் என பிரமித்துள்ளனர்.

இன்ஸ்டாவே எரிகிறது

இன்ஸ்டாவே எரிகிறது

இன்னும் சிலர் சீக்கிரம் சினிமா சான்ஸ் கொடுத்துவிடுங்கள், உடை ரொம்பவே குறைந்து கொண்டே போகிறது என கூறியுள்ளனர். மேலும் சிலர் சட்டையில் பட்டனை போட மறந்துட்டீங்க என நியாபகப்படுத்துவது போல் கலாய்த்துள்ளனர். மேலும் இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் இன்ஸ்டாகிராமே பற்றி எரிகிறது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X