பிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்!
நடிகை விஜயலட்சுமி வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்
சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்த விஜயலட்சுமி சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது சில காரணங்களால் தள்ளிப்போக வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கட் புரடொக்ஷனுடன், டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். இப்படத்தில் தற்போது விஜயலட்சுமியும் இணைந்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. சில படங்களில் கதாநாயகியாக நடித்த அவர், சென்னை 28 இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார்.
பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு அவருக்கு பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் கைகொடுத்தது. அதனை சரியாக பயன்படுத்தி பைனல் வரை வந்தார்.
இப்போது வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த செய்தியை அவர் ட்விட்டரில் உறுதிபடுத்தியிருக்கிறார்.
இப்படத்தில், ஜெய், வைபவ், பிரேம்ஜி, சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வெங்கட் பிரபுவும் நடிக்கிறார். இவர்களுடன் பிக்பாஸ் பிரபலமான ஜனனியும் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











