தயங்காதீங்க.. கடைசி நேரத்தில் தோற்றுவிடாதீங்க அண்ணா.. விஜய்க்கு நடிகை அட்வைஸ்!
சென்னை: நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைப்பதற்காக எந்த அரசியல் கட்சியின் ஆதரவும் தேவைப்பட்டாலும் தயங்காமல் ஏற்றுக் கொள்ள என ஆலோசனை வழங்கியுள்ளார். குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளின் ஆதரவும் தேவைப்பட்டாலும் அதை பயன்படுத்திக் கொள்ளுங்க என விஜய்க்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
விஜயலட்சுமி தனது வீடியோவில், ஆட்சி அமைப்பதற்கு உங்களுக்கு திராவிட கட்சிகளின் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் அவர்களின் உதவியை எடுத்துக் கொள்ளுங்க, ஸ்டாலின் அவர்கள் நீங்க ஆட்சி அமைக்க எந்தவிதமான தடையும் செய்ய மாட்டோம் என கூறியிருக்கிறார். திமுகவின் உதவி தேவைப்பட்டாலும் அவர்களின் உதவியை எடுத்துக் கொள்ளுங்க. இல்லை அதிமுகவின் உதவி தேவைப்பட்டால் அவர்களின் உதவியையும் எடுத்துக் கொள்ளுங்க. யாருமே தமிழ்நாட்டில் உங்களுக்கு எதிரி கிடையாது.

நடிகை விஜயலட்சுமி: அனைவரும் நீங்கள் நன்றாக வர வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். நீங்கள் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்து இருக்கீங்க, மக்களும், தொண்டர்களும் ஆவலுடன் நீங்கள் முதலமைச்சராக வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது நீங்கள் சின்னதா ஒரு விஷயத்தில் தடங்கலாகி இருக்கிறீர்கள். யாருமே நமக்கு எதிரி கிடையாது அண்ணா. அனைவரையும் உங்களின் குடும்பமாக நினைத்துக் கொண்டு உங்களுடைய வேலையை தொடங்குங்க. நீங்களும் இவ்வளவு தூரம் போராடி வந்து கடைசியில் தோற்று விடாதீங்க என நடிகை விஜயலட்சுமி பேசி உள்ளார்.
தவெக விவகாரம்: இந்த வீடியோ வெளியாகியிருக்கும் நேரத்தில், தவெக மற்றும் ஆளுநர் தொடர்பான விவகாரங்களும் அரசியல் பெரும் புயலை எற்படுத்தி உள்ளது. தமிழக அரசியல் சூழலில் ஆளுநர் மாளிகையை மையமாகக் கொண்டு பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இதனால், தவெக தனித்து பயணிக்குமா? அல்லது எதிர்காலத்தில் கூட்டணி அரசியலுக்கு நகருமா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அதே நேரத்தில், விஜய் முதலமைச்சராக வேண்டும் என்ற கோஷம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், விஜயலட்சுமியின் இந்த வீடியோ தவெக தொண்டர்களிடையே புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications