மூக்கில் டியூப்.. எப்படி இருக்கிறார் விஜயலக்ஷ்மி.. தீயாய் பரவும் சிகிச்சைப் பெறும் போட்டோ!
சென்னை: நடிகை விஜயலக்ஷ்மி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், மீசையை முறுக்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை விஜயலக்ஷ்மி.
பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யாவுக்கு அண்ணியாகவும் நடித்திருப்பார்.

பிபி மாத்திரைகள்
தமிழ் மட்டுமின்றி கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் விஜயலக்ஷ்மி நேற்று முன்தினம் இரவு தற்கொலைக்கு முயன்றார். அளவுக்கு அதிகமாக பிபி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

பெரும் பரபரப்பு
பிபி மாத்திரைகளை உட்கொண்ட கையோடு, இதுதான் தன்னுடைய கடைசி வீடியோ என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார். மிகுந்த மன அழுத்தம் காரணமாக தான் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக கூறினார். அவரது இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மருத்துவமனை
நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் அவரை மீட்டு மருத்துவனைமயில் அனுமதித்தனர். சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை
விஜயலக்ஷ்மியின் உடல்நிலை ஸ்டேபிளாக இருப்பதாகவும் அவர் ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும் தகவல் வெளியானது. இதனிடையே நடிகை விஜய லட்சுமியிடம் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.

வாக்குமூலம்
மேலும் நடிகை விஜயலக்ஷ்மியிடம் மாஜிஸ்திரேட் வெங்கடேசன் வாக்குமூலமும் பெற்றார். இதனால் விஜயலக்ஷ்மி விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நடிகை விஜயலக்ஷ்மி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூக்கில் டியூப்
அந்த போட்டோவில் விஜயலக்ஷ்மியின் மூக்கில் டியூப் பொருத்தப்பட்டுள்ளது. விஜயலக்ஷ்மி மயக்க நிலையில் உள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் விஜயலக்ஷ்மி விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர். மேலும் விஜயலக்ஷ்மியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











