டூப் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடித்த அஜித்... விஜயலட்சுமி பகிர்ந்த சுவாரசியமான தகவல் !

சென்னை : அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவயானி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் காதல் கோட்டை. இப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

காதலர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமான இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வெற்றி பெற்றது.

இப்படம் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை, அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி அஜித் குறித்து பல சுவாரசியமான தகவல்களை வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

அகத்தியனின் மகள்

அகத்தியனின் மகள்

சென்னை 28 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான விஜயலட்சுமி, பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய விஜயலட்சுமி, பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

விஜயலட்சுமி ரீ என்ட்ரி

விஜயலட்சுமி ரீ என்ட்ரி

சென்னை 28 இரண்டாம் பாகத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். தயாரிப்பாளராக இருந்து வரும் விஜயலட்சுமி இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். தற்போது இவர், அஜித் நடித்த காதல் கோட்டை இன்றுடன் 25 ஆண்டை நிறைவு செய்துள்ளது. அதன் இனிமையான தருணத்தை நினைவு கூர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.

சண்டை காட்சியில் டூப் இல்லாமல்

சண்டை காட்சியில் டூப் இல்லாமல்

நான், கனி அக்கா, ரஞ்சனி நாங்க மூனு பேரும் அஜித் அவர்களை முதன்முறையாக பார்த்தது வான்மதி படத்தின் ஷூட்டிங்கல தான். இந்த படத்தை எனது தந்தை அகத்தியன் தான் இயக்கினார். அஜித் எங்கள் அனைவரிடமும் ரொம்ப ஜாலியா பேசினார். ரொம்ப அரட்டை அடிச்சோம். அப்புறம் ஒரு சண்டைக்காட்சிக்கு தயாரானார். அந்த காட்சியில் டூப் போடாமல் அவரே சண்டை காட்சியில் நடித்தார்.

அஜித்தின் தீவிர ரசிகர்கள்

சண்டைகாட்சி முடிந்த பிறகு நாங்கள் மூவரும் அவரை தேடினோம். ஆனால் அவர், ஒரு லைட்மேன் மடியில் தலைவைத்து வெறும் தரையில் அப்படியே அழகாக படுத்திருந்தார். அந்த காட்சியை பார்க்க ரொம்ப அழகாக இருந்தது. ஏற்கனவே எங்களுக்கு அஜித்னா பிடிக்கும், அதுக்கு அப்புறம் அஜித்தின் தீவிர ரசிகர்களாகவே மாறிவிட்டோம் என்று நடிகை விஜயலட்சுமி கூறினார்.

Recommended Video

VIJI vs DESINGH பிரியாணி சண்டை | எங்கடா எங்க கனி அக்கா! | Cook With Comali
பர்ஸ்ட் லுக்

பர்ஸ்ட் லுக்

அஜித் தற்போது எச் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X