அளவுக்கு அதிகமாக பிபி மாத்திரைகளை விழுங்கி நடிகை விஜயலக்ஷ்மி தற்கொலை முயற்சி.. நிலைமை என்ன?

சென்னை: பிரபல நடிகையான விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Actress Vijaya Lakshmi current status in hospital • BP Tablets

நடிகை விஜயலக்ஷ்மி, விஜய், சூர்யா நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கச்சியாகவும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள விஜயலக்ஷ்மி கன்னட சினிமாவிலும் நடித்திருக்கிறார். ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், மீசையை முறுக்கு ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

ரஜினிகாந்த் உதவி

ரஜினிகாந்த் உதவி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வீடியோ வெளியிட்டார். தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கம் தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு உதவி செய்ததாக தகவல் பரவியது.

பிபி மாத்திரைகள்

பிபி மாத்திரைகள்

இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் நடிகை விஜயலக்ஷ்மி, நேற்று இரவு அதிக அளவு பிபி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயலக்ஷ்மியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

விஜயலக்ஷ்மி வீடியோ

விஜயலக்ஷ்மி வீடியோ

இதனிடையே நடிகை விஜயலக்ஷ்மி தான் தீவிர மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அதன்காரணமாக தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி, விஜயலக்ஷ்மியின் குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி டிவிட்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், மருத்துவமனையில் விஜயலட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்தேன், அவர்களுக்கு அனைத்து உதவிகளை செய்தேன். அவர்கள் ஒதுக்கப்பட்ட சித்தப்பிரமை, சோகத்தில் நிலைகுலைந்து போன மூன்று பெண்கள். நான் உஷாவுடன் பணிபுரிந்தேன், அவருடைய திருமணத்தில் கலந்து கொண்டேன், நேற்று அவரை கூட அடையாளம் காண முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம் டிவிட்

இதேபோல் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ள டிவிட்டில் விஜயலக்ஷ்மியின் உடல்நிலை இப்போது பரவாயில்லை. சோஷியல் மீடியா துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்களால் அவர் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளார். தனி ஒரு பெண்ணாக நின்று போராடி அவர் நிறைய எதிர்கொண்டார். சைபர் புல்லிங்கை நிறுத்துங்கள். அவரது தனிப்பட்ட வாழ்க்கை ஏமாற்றப்பட்டது ஒரு பெரிய காரணம். உலகம் அவரை சரியாக ட்ரீட் செய்யவில்லை, அதுதான் அவரை இதை செய்ய வைத்துள்ளது.

யாராவது உதவுங்கள்

மேலும் நடிகர் சங்கம் அவருக்கு உதவி செய்து வருவதாகவும் அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளுக்காக காத்திருக்கிறோம். யாராவது உதவ முடியும் என்றால் எங்களுடன் இணையுங்கள் என்றும் நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X