“ப்ளீஸ் ரஜினிசார் ஹெல்ப் பண்ணுங்க.. ஒவ்வொரு நிமிஷமும் நரகமா இருக்கு”.. பிரபல நடிகை வீடியோவில் கதறல்

நடிகை விஜயலட்சுமி ரஜினியிடம் உதவி கேட்டு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

ரஜினிசாரிடம் அழைத்து செல்லுங்கள்.. நடிகை விஜயலட்சுமி உருக்கம்-வீடியோ

சென்னை: யாருடைய உதவியும் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாகவும், ரஜினி தான் தனக்கு உடனடியாக உதவ வேண்டும் எனவும் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி.

தமிழில் ப்ரண்ட்ஸ் உள்பட சில படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால், சீரியல்களில் நடிக்கத் தொடங்கினர். பின்னர் அந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக ஒரு புகாரைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் பணம் இல்லாமல் கஷ்டப்படும் தனக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் யாரும் உதவவில்லை என்ற புகாரைக் கூறினார்.

மீண்டும் வீடியோ:

மீண்டும் வீடியோ:

இதற்கிடையே உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கே பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவரது சகோதரி உதவி கேட்டு வெளியிட்ட வீடியோ வைரலானது. சிலகாலம் ஊடகங்களில் இருந்து ஒதுங்கி இருந்த விஜயலட்சுமி தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உதவி தேவை:

உதவி தேவை:

அதாவது, தனது தாயார் மற்றும் சகோதரிக்கு உதவ வேண்டும் என அந்த வீடியோவில் விஜயலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் அவர், ‘நான் ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருக்கிறேன், நான் அழிஞ்சு போகணும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க.

ரஜினி உதவி தேவை:

ரஜினி உதவி தேவை:

என் குடும்பம் இப்போ சொல்ல முடியாத கஷ்டத்துல இருக்கு. இங்க நானு, எங்கம்மா, எங்க அக்கானு மூணு லேடீஸ் ரொம்பக் கஷ்டத்துல இருக்கோம். இதை சூப்பர்ஸ்டார் ரஜினி சாரால் மட்டுமே சரி செய்ய முடியும். ஆனா, எப்டி அவரை நேர்ல சந்திக்கிறதுனு எனக்குத் தெரியல. இந்த வீடியோ எப்படியும் அவர் பார்வைக்கு போகும்னு நம்புறேன்" என உருக்கமாக அவர் தெரிவித்துள்ளார்.

பரிதாபம்:

பரிதாபம்:

சமூகவலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. விஜயலட்சுமியின் பரிதாப நிலை கண்டு, நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழ்த்திரையுலகினர் எனக் குறிப்பிடாமல், அவர் ஏன் ரஜினியிடம் மட்டும் உதவி கேட்கிறார் எனத் தெரியவில்லை. எப்படியோ கஷ்டத்தில் இருக்கும் அவருக்கு உதவி கிடைத்தால் நல்லது தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X