Vijay: நீங்க என்ன ரொம்ப உத்தமரா? விஜய்யை எதிர்த்த சீமானுக்கு எதிராக களமிறங்கிய பிரபல நடிகை!

சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு முடிந்த பின்னர் பல அரசியல் இயக்கங்கள் அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் காட்டமாகவே விமர்சித்து வருகின்றார். குறிப்பாக விஜய்யை கூமுட்டை எனவும் லாரி அடித்துச் செத்துப்போவாய் எனவும் சீமான் கூறியது அரசியல் நாகரீகத்தினை அவமதிக்கும் வகையில் இருப்பதாக தவெக தொண்டர்கள் தெரிவித்தனர். இவ்வாறாக விஜய்யை மிகவும் மோசமாக விமர்சித்த சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் அரசியல் நடவடிக்கை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, லாரியில் அடிப்பட்டுச் செத்துப்போவாய் எனக் கூறியது விஜய் ரசிகர்களை ரொம்பவும் காயப்படுத்தியது மட்டும் இல்லாமல், கோபமூட்டிவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் என பலரும் சீமானுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக எக்ஸ் பக்கத்தில் சீமானை கடுமையாகவும் மிகவும் மோசமாகவும் விமர்சித்தும் வருகின்றனர். இதில் பல ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

seeman vijay

இந்நிலையில் சீமான் அப்படி பேசியதற்கு காரணம் இருக்கின்றது என சீமான் ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி விஜய்யுடன் ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தார். இவர் ஏற்கனவே சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டும் உள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்.

உத்தமரா: இந்நிலையில் சீமான் விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததால் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், " என்ன மிஸ்டர் சீமான், சாபமெல்லாம் விடுகின்றீர்கள்? விஜய் அண்ணனுக்கு ரோட்டின் இந்தப் பக்கம் இரு, அல்லது அந்தப் பக்கம் இரு, நடுவில் இருந்தால் லாரி அடித்துச் செத்துப்போவீர்கள் என சாபம் எல்லாம் விடுகின்றீர்கள். நீங்க என்ன ரொம்ப உத்தமரா மிஸ்டர் சீமான். நான் உங்க ரூட்டுக்கே வரேன்.

seeman vijay

ஆபாச வீடியோ: அண்ணன் விஜய், திமுக என இவர்கள் எல்லாம் உங்கள் பார்வையில் கொள்கை ரீதியாகத்தானே தவறாக உள்ளதாக கூறுகின்றீர்கள். (மக்கள் அப்படிச் சொல்லவில்லை) கொள்கை ரீதியாக தவறு செய்பவர்களே லாரி அடித்துச் செத்துப்போவர்கள் என்றால், எங்களைப் போன்ற பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த நீங்க, எது அடித்துச் சாகமாட்டீர்கள் மிஸ்டர் சீமான். முதலில் உங்க கட்சியில் உள்ள ஓட்டைகளை எல்லாம் சரி செய்யுங்கள். திருச்சி சூர்யா உங்களின் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு, உங்களின் மானத்தினை வாங்கப்போகின்றாராம். முதலில் அதைப்போய் கவனியுங்கள்.

கூமுட்டை: திமுகவுக்கு என்ன செய்ய வேண்டும் என திமுகவுக்குத் தெரியும், விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும்னு விஜய் அண்ணனுக்குத் தெரியும். நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைஞ்சுட்டு இருக்கீங்க. எனவே உத்தமர் போலவும், கண்ணகி மாதிரியும் சாபம் எல்லாம் விடாதீங்க. நான் தான் உங்களுக்கு 24 மணி நேரமும் சாபம் விட்டுக்கொண்டு உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் மிகவும் மோசமான வார்த்தைகளைக் கொண்டும் விமர்சித்துள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வேகமாக பரப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X