twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த விஜயலக்ஷ்மி.. அர்ச்சனாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் கொடுத்த டாஸ்க்க பாருங்க!

    |

    சென்னை: தீபாவளி ஸ்பெஷலாக பிக்பாஸ் ஹவுஸ்மெட்ஸ்களுக்கு டாஸ்க் கொடுத்தார் நடிகை விஜயலக்ஷ்மி.

    தீபாவளிய பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஹவுஸ்மெட்ஸ் செம ஜாலியாக உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் நாள்தோறும் விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

    தப்பா விளையாடிய பாலாஜி.. கடுப்பாகி இடியை இறக்கிய பிக்பாஸ்.. கெஞ்சிய ஆரி.. அதிர்ச்சியில் ஹவுஸ்மெட்ஸ்!தப்பா விளையாடிய பாலாஜி.. கடுப்பாகி இடியை இறக்கிய பிக்பாஸ்.. கெஞ்சிய ஆரி.. அதிர்ச்சியில் ஹவுஸ்மெட்ஸ்!

    பிரபலங்கள் பங்கேற்பு

    பிரபலங்கள் பங்கேற்பு

    இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மெட்ஸ்களை கடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதன்படி, மகத், ஷெரின், வனிதா, ஐஸ்வர்யா தத்தா, சாண்டி மாஸ்டர் விஜயலக்ஷ்மி ஆகியோர் பங்கேற்றனர்.

    ஜாலி டாஸ்க்

    ஜாலி டாஸ்க்

    இந்த விருந்தாளிகள் அனைவருமே பிக்பாஸ் வீட்டில் வீடியோ வாயிலாக பங்கேற்றனர். ஹவுஸ்மெட்ஸ்களிடம் நலம் விசாரித்த அவர்கள், ஹவுஸ்மெட்ஸ்களுக்கு ஜாலி டாஸ்க்குகளையும் கொடுத்தனர்.

    மடித்துக்கட்டிய அர்ச்சனா

    மடித்துக்கட்டிய அர்ச்சனா

    அதன்படி நடிகை விஜயலக்ஷ்மி, அர்ச்சனாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் டாஸ்க் கொடுத்தார். டாஸ்க் என்றதுமே அர்ச்சனா துப்பட்டாவையெல்லாம் மடித்துக் கட்டிக்கொண்டு தயாரானார். அதனை பார்த்த விஜயலக்ஷ்மி, என்ன டாஸ்க் என்று தெரியுமா மடித்துக்கட்டிக் கொண்டு வர்றீங்களே என்றார்.

    என்ன டாஸ்க்

    என்ன டாஸ்க்

    அதற்கு எந்த டாஸ்க்காய் இருந்தால் என்ன? மடித்து கட்டிக்கொள்வது நல்லதுதானே என்றார் அர்ச்சனா. தொடர்ந்து இருவருக்கும் பபுள் டாஸ்க்கை அறிவித்தார் விஜயலக்ஷ்மி. அதன்படி ஸ்டார்ட்டிங் பாயிண்டில் விடும் பபுளை சற்று தொலைவில் உள்ள வளையத்திற்குள் செல்ல வைக்க வேண்டும்.

    என்ன டாஸ்க்குய்யா இது?

    என்ன டாஸ்க்குய்யா இது?

    இந்த டாஸ்க்கில் பல முயற்சிகளுக்கு பிறகு அர்ச்சனா வெற்றி பெற்றார். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்னடா கன்டென்ட் இல்லையா சின்ன குழந்தைங்களுக்கு கொடுக்ற மாதிரி இந்த டாஸ்க் கெல்லாம் கொடுக்றீஙகள் என்று கேட்டு கலாய்த்துள்ளனர்.

    English summary
    Actress Vijaylakshmi conducts task to housemates for Diwali special. Archana has won in the bubble task.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X