'நீங்களும் இப்படி இறங்கீட்டீங்களே..?' பிரபல நடிகையின் கருப்பு வெள்ளை போட்டோவுக்கு கண்டபடி கேள்வி!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள கருப்பு வெள்ளை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில், கே.பாலசந்தர் இயக்கிய பொய் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் விமலா ராமன்.
உதய்கிரண் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் கீது மோகன் தாஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

முக்கிய கேரக்டர்
இதையடுத்து ஜெகநாத் இயக்கிய, ராமன் தேடிய சீதை உட்பட சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள விமலா, தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக சுந்தர். சி நடித்த இருட்டு படத்தில் நடித்திருந்தார். இப்போது வெப் சீரிஸ் ஒன்றில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

விமலா ராமன்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வளர்ந்தவரான நடிகை விமலா ராமன், மற்ற நடிகைகளை போல் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். இதற்கு ரசிகர்கள் பலர் அதிகமான லைக்ஸ்களை அள்ளிக் குவிப்பார்கள். அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவிப்பார்கள். சில கமென்ட்களுக்கு அவர் பதிலளிப்பார்.

கருப்பு வெள்ளை
இப்போது அவர் வெளியிட்டுள்ள பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கருப்பு வெள்ளையில் கிளாமராக இருக்கும் இந்த புகைப்படங்களை பிரபல போட்டோகிராபர் ராஜ் சுரி எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களை கண்டு, 'நீங்களுமா, இப்படி இறங்கிட்டீங்க?' என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

ஹாட்டா இருக்கு
ஒருவர், யாராவது ஃபயர் மேனுக்கு போன் பண்ணுங்கப்பா..ஓவர் ஹாட்டா இருக்கு? என்று கிண்டலாகக் கூறியுள்ளார். இதுதான் எங்களுக்கான லாக்டவுன் ட்ரீட்டா? என்று கேட்டுள்ள ஒரு நெட்டிசன், சிட்னியில் இருக்கீங்களா, இந்தியால இருக்கீங்களா என்று கேட்டுள்ளார். இது உண்மையிலேயே நீங்கதானா?, இப்பதான் முதல் முறையாக உங்களை இப்படி பார்க்கிறேன் என்று சிலரும், இதுதான் போல்ட் அண்ட் பியூட்டிபுள் என்று சிலரும் கூறியுள்ளனர்.

மலையாள சினிமா
நீங்க வேற லெவல் பியூட்டி..இதே போல நிறைய போட்டோஸ் பதிவு பண்ணுங்க என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். சில மலையாள ரசிகர்கள், சீக்கிரம் மலையாள சினிமாவுக்கு வாங்க என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர், இது கில்லிங் லுக். நிஜமாகவே மிரட்டலாக இருக்கு' என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











