Don't Miss!
- News
"சேர் எங்க?" கோபமாகி கல்லை தூக்கி எறிந்த அமைச்சர் நாசர்.. தீயாய்ப் பரவும் வீடியோ!
- Sports
அவங்க நாடு மீது தான் விஸ்வாசம் இருக்கும்.. இந்தியா தோற்றதுக்கு காரணமே அது தான்.. கவாஸ்கர் தாக்கு
- Lifestyle
நீங்க 3, 12, 21 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவரா?அப்ப உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கு தெரியுமா?
- Automobiles
டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐயே தூக்கி சாப்பிட்ரும் போல... மைலேஜ் தருவதில் செம்ம கில்லாடி!
- Finance
பெண்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மத்திய அரசு விரைவில் அறிவிக்கலாம்..!
- Technology
iPhone கேமரா உடைந்தால் என்ன செய்வது? இது தெரியாம சர்வீஸ் கொடுத்தா பணம் போய்விடும்.!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
வினய்யுடன் காதலை உறுதி செய்த விமலா ராமன்.. குடும்பம் என ட்வீட்!
சென்னை : நடிகர் வினய் ஹீரோவாக தன்னுடைய கேரியரை துவங்கியவர். தற்போது வில்லனாக அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஒரு ஆண்டுகளாகவே இவருக்கும் மலையாள நடிகை விமலா ராமனுக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில், இந்தத் தகவலை இருவரும் உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.
மனம்
வருந்தி
பேசிய
வினய்.
வாய்விட்டு
சிரித்த
சூர்யா...
அப்படி
என்ன
சொன்னார்?

நடிகர் வினய்
உன்னாலே உன்னாலே, என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் வினய். தற்போது இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வில்லன் கேரக்டர்களில் வெளியாகி வருகின்றன. சைக்கோ வில்லன் கேரக்டர்களில் இவரை அதிகமாக பார்க்க முடிகிறது.

விமலா ராமன் -வினய் காதல்?
வினய்க்கும் பிரபல மலையாள நடிகை விமலா ராமனுக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த ஒரு ஆண்டாகவே தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது. அதற்கேற்ப இருவரும் தாங்கள் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தவண்ணம் உள்ளனர்.

விமலா ராமன் பிறந்தநாள்
இதனிடையே தற்போது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை விமலா ராமன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அவரது பெற்றோர் மற்றும் வினய்யுடன் அவர் காணப்படுகிறார். பெரிய ரெஸ்டாரெண்ட் மற்றும் பொது இடங்களில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

குடும்பம் என போஸ்ட்
இந்தப் புகைப்படங்களின் கேப்ஷனில் தன்னுடைய குடும்பம் என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளார் விமலா ராமன். விமலா ராமன் மற்றும் வினய் இருவரும் இந்தப் புகைப்படங்களில் மிகவும் க்யூட்டாக காணப்படுகின்றனர். மேலும் பிறந்தநாள் கேக்கையும் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் இந்த பிறந்தநாளை கொண்டாடுவதாகவும் இந்த பிறந்தநாள் தனக்கு மிகவும் ஸ்பெஷல் எனவும் விமலா ராமன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். விரைவில் இவர்கள் தங்களின் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.