அரசியலில் 'அ' எழுத்து கூட தெரியல.. விஜய்யை கடுமையாக விமர்சித்த நடிகை விந்தியா!
சென்னை: தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பெரம்பூர், கொளத்தூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்த போது, போதிய பாதுகாப்பு இல்லாததால் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, உரிய பாதுகாப்பு கேட்டு அனுப்பிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நடிகை விந்தியா அரசியலில் தவெகவிற்கு 'அ' கூட தெரியவில்லை என கிண்டலடித்து பேசி உள்ளார்.
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு, பிரச்சாரத்தை முடித்துவிட்டு கொளத்தூருக்கு புறப்பட்டார். ஆனால், விஜய்க்கு போதுமான வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. இதனால், வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து, தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் உள்துறை செயலாளருக்கும் கடிதம் எழுதி இருந்தார்.
கடித சர்ச்சை: அந்த கடிதத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா ஆகியோரில் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவி, கடந்த 2025 ஜனவரி மாதமே மணிப்பூர் ஆளுநராகிவிட்டார். தற்போது உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் உள்ளார். அதுகூட தெரியாமல் தவெகவினர் இருப்பதாக நேற்று செய்தி வெளியானது.

விந்தியா கிண்டல்: இதுகுறித்து பேசி இருக்கும் நடிகை விந்தியா, அரசியலுக்கு வந்தவர்கள் இன்னும் பாதுகாப்பு கேட்டு யாருக்கு கடிதம் எழுதுகிறோம் என தெரியாதவர்கள், அவர்களின் பாதுகாப்புக்கு யாரை கேட்க வேண்டுமென தெரியாதவர்கள் எப்படி மக்கள் பாதுகாப்பு பற்றி பேசுவார்கள், எப்படி மக்களுக்கு நல்லாட்சி தருவார்கள், எப்படி மக்களை பாதுகாப்பார்கள். முதலில் அவர்கள் அரசியலில் 'அ' என்ற எழுத்தை கற்றுக்கொண்டு பிறகு அரசியலுக்கு வர சொல்லுங்க என்றார்.
அவர் அரசியல் தலைவர் இல்லை: அதைத்தொடர்ந்து செய்தியாளர் திமுகவிற்கும் டிவிகேவிற்கும் தான் போட்டி என விஜய் சொல்வது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விந்தியா, அப்படி சொன்னால் தான் செய்தியாளர்கள் அவரை பார்ப்பார்கள், அப்படி பேசவில்லை என்றால், ஏன் அவரை நீங்க திரும்பி பார்க்க போறீங்க. இப்பவும் விஜய்யை யாரும் அரசியல் தலைவராக பார்க்கவில்லை, கட்சித் தலைவராக பார்க்கவில்லை, நடிகர் விஜய்யை பார்ப்பதற்கு அவரின் ரசிகர்கள் தான் ஆர்வமாக வருகிறார்களே தவிர தமிழ் நாட்டு மக்கள் ஆர்வமாக செல்வில்லை என நடிகை விந்தியா பதில் அளித்தார்.
பொய்யான செய்தி: அதேசமயம், கடித சர்ச்சை குறித்து விளக்கம் அளித்து இருக்கும் தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன், அடுத்தடுத்து அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பி வருகின்றனர். சில ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் உண்மையை ஆராயாமல், ஒருதரப்பு தரும் தவறான தகவல்களை அப்படியே செய்திகளாக வெளியிட்டு வருவது தவறு என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











