கார் விபத்தில் சிக்கிய கணவர்.. யாருமே உதவிக்கு வரல.. வினோதினியின் வாழ்க்கையில் நடந்த சோகம்!
சென்னை: கார் விபத்தில் சிக்கிய கணவரை காப்பாற்ற மிகவும் போராடியதாக நடிகை வினோதினி தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
1982ம் ஆண்டு மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர் நடிகை வினோதினி.
{image-newproject28copy9-1701670317.jpg tamil.filmibeat.com
இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம் மற்றும் கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை வினோதினி: 90 களில் கதாநாயகி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வினோதினி, பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான வண்ண வண்ண பூக்கள் படத்தில், பிரசாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் சீரியல்களிலும் நடித்து வந்த வினோதினி திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.
விபத்தில் சிக்கிய கணவர்: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வினோதினி, என் கணவர் ஒரு விபத்தில் சிக்கினார். 20 வயதுள்ள இரண்டு பேர் பைக்கில் வந்து அவரை மோதிவிட்டு சென்றுவிட்டனர். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. விபத்தை ஏற்படுத்திவிட்டு பத்தாயிரம் ரூபாயை மட்டும் அபராதமாக செலுத்திவிட்டு சென்று விட்டனர். நம் நாட்டில் வாழ்க்கையின் விலை இவ்வளவு தானா என்று தெரியவில்லை.
ரொம்ப கஷ்டப்பட்டேன்: அந்த விபத்திற்கு பின் என் குடும்பம் மிகப்பெரிய துன்பத்தை சந்தித்தது. அந்த சூழ்நிலையில் நான் தனி ஆளாக ,யாருடைய உதவியும் இல்லாமல் இருந்தேன். நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த போதும் ஒரு சிலர் மட்டுமே என்னை வந்து பார்த்தார்கள். அனைவரும் சேர்ந்து வந்து இருந்தால், விபத்து ஏற்படுத்தியவர்கள் யார் என்று கண்டுபிடித்து இருக்கலாம்.
யாரும் உதவல: விபத்திற்கு பின் என் கணவரை மீட்டு கொண்டு வர மிகவும் கஷ்டப்பட்டேன். யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஆளாக பல கஷ்டங்களை அனுபவித்தேன். எவ்வளவு செலவாகும் என்று சொல்ல முடியாது. என்னிடமிருந்தோ அல்லது என் கணவர் குடும்பத்திலிருந்தோ எந்த உதவியும் இல்லை. போன் பண்ணி மட்டும் என்ன வேண்டும்... என்ன வேண்டும் என்று மட்டும் கேட்டார்கள். என் குடும்பத்திற்காக நான் மட்டுமே இருந்தேன், எப்படியாவது என் கணவரைக் காப்பாற்றி குழந்தைகளை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது.


Click it and Unblock the Notifications