twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓபிஎஸ் வீட்டருகே விபத்து.. பிரபல நடிகையின் கணவர் படுகாயம்

    நடிகை வினோதினியின் கணவர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.

    |

    சென்னை: நடிகை வினோதினியின் கணவர் வெங்கட் ஸ்ரீதர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.

    தமிழில் வண்ண வண்ண பூக்கள் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வினோதினி. திரைப்படங்கள் மட்டுமின்றி சீரியலிலும் இவர் நடித்துள்ளார். இவரது கணவர் வெங்கட் ஸ்ரீதர்(52) கட்டிட ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார்.

    Actress Vinodhinis husband severly injured in a bike accident

    இவர் நேற்று திருவான்மியூரில் இருந்து மெரினா நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு முன் சென்ற போது இவரது வாகனம், பாஷா என்பவரின் வண்டி மீது மோதியது. இந்த விபத்தில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அடையாறு போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் வெங்கட்டிற்கு வயிறு மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

     100 நாள் ஜாலியா இருக்க பார்க்கிறான்: கணவரை கலாய்த்த அஞ்சனா 100 நாள் ஜாலியா இருக்க பார்க்கிறான்: கணவரை கலாய்த்த அஞ்சனா

    இந்த விபத்து குறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    Actress Vinodhini's husband severly injured in a bike accident, that happened yesterday in Chennai greenways road, near deputy chief minister O.Paneerselvam's home.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X