உங்களை அயன் லேடினு சொன்னா தப்பே இல்ல வினோதினி…!

சென்னை : தன்னந்தனி பெண்ணாக போராடி பல பிரச்சினைகளைத் தாண்டி வந்துள்ளார் வினோதினி. கணவர் ஒரு விபத்தில் சிக்கி எழுந்திருக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், அவரை கவனித்துக்கொள்வதற்காக நடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் அவர் கூறினார்.

மணல் கயிறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வினோதினி. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து பின் நடிகையாகவும் பல படங்களில் நடித்து இருக்கிறார் .

Actress Vinodhini speeks to media

இவர் பாலு மஹேந்திராவின் படமான 'வண்ண வண்ண பூக்கள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் கதாநாயகியானவர் இவர்.

சினிமாவில் நடித்து கொண்டே சீரியல்களிலும் நடித்தும் வந்தார் வினோதினி. இவர் சித்தி, அகல் விளக்கு, விடாது சிரிப்பு போன்ற சீரியல்களில் நடித்து இருக்கிறார். மேலும் கிரேசி மோகனின் நாடகங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், சிரி சிரி கிரேசி என்ற நகைச்சுவை நாடகத்தில் நடித்து வந்தார்.

தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பதை படிபடியாய் குறைத்து வந்த வினோதினி. நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அக்னி நட்சத்திரம் நெடுந்தொடரில் நடித்தார். ஆனால் திடீரென்று அவர் பாதியிலேயே விலகிவிட்டார். ஏன் விலகினார் என்பதற்கான காரணத்தை தற்போது ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

Actress Vinodhini speeks to media

என் கணவர் ஒரு விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்தார். அதனால் அவரை கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நான் இருந்ததால் நடிப்பை பாதியில் விட்டுவிட்டேன் என்றார் வினோதினி. மேலும், என் கணவர் வாழ்நாளில் எழுந்திரிக்கவே முடியாத அளவுக்கு அந்த விபத்து எங்களது வாழ்க்கையை திசைமாற்றிவிட்டது என்று கண்ணீர் மல்க கூறினார்.
மேலும் என் கணவரின் பணத்தை தெரிந்தவர்களே ஏமாற்றி விட்டார்கள் அதை கோர்ட்டுக்கு சென்று நீதியை பெற்றேன். இருந்தாலும் அவர்கள் இன்னும் பணத்தை தர மறுத்து வருகிறார்கள். நாங்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறோம், இனியும் எங்களால் எவ்வளவு தான் அவர்களை எதிர்த்து சண்டையிட முடியும் என்று தெரியவில்லை என்று கூறினார்.

இனியும் பொருத்துக்கொள்ள முடியாது என்ற சூழ்நிலையல் தான் ஊடகத்திடம் வந்து எங்களது வலியை கூறுவதாகவும் வினோதினி தெரிவித்திருக்கிறார். தனி ஒரு பெண்ணாக போராடி என் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை தாண்டி வந்துவிட்டேன். இனியும் தொடர்ந்து போராடி எங்களுக்கான நீதியை தாங்கள் பெறுவோம் என்றும் தன்னம்பிக்கையுடன் கூறினார் வினோதினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X