For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நிர்மலா சீதாராமனை விமர்சித்த நடிகை வினோதினி.. உள்ளே தூக்கி வச்சிட்டா.. அடுத்த வீடியோ இதோ!

  |

  சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாகவும் குணசித்திர நடிகையாகவும் வலம் வரும் வினோதினி ஜிஎஸ்டி வரி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட சமூகம் சார்ந்த விஷயங்களில் துணிச்சலாக தனது விமர்சனத்தை நகைச்சுவையாக சொல்லி வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.

  சமீபத்தில் அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து விட்டது, ரூபாய் மதிப்பு சரியவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு பலரும் ட்ரோல் செய்தனர்.

  அப்போது, வினோதினி அது தொடர்பாக வெளியிட்ட தேங்காய் சட்னி ஊசிப்போன வீடியோ செம டிரெண்டான நிலையில், தன்னை உள்ளே தூக்கி வச்சிட்டா என்ன அப்பா பண்ணுவீங்க என அவரது அப்பாவுடன் போட்டுள்ள புதிய வீடியோ தீயாக பரவி வருகிறது.

  உயிர் வாழ ஆக்ஸிஜன் இல்லாதபோது… ஜிஎஸ்டி வரியை ஏன் செலுத்தனும்… நடிகை நிலா பாய்ச்சல் !உயிர் வாழ ஆக்ஸிஜன் இல்லாதபோது… ஜிஎஸ்டி வரியை ஏன் செலுத்தனும்… நடிகை நிலா பாய்ச்சல் !

  நகைச்சுவை நடிகை

  நகைச்சுவை நடிகை

  காஞ்சிவரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகை வினோதினி. எங்கேயும் எப்போதும், கடல் படங்களில் நடித்த இவர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். ஜில்லா, ஜிகர்தண்டா, பிசாசு, பசங்க 2, எல்கேஜி, சூரரைப் போற்று மற்றும் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் வரை இவர் நடித்துள்ளார்.

  நிர்மலா சீதாராமன் பேச்சு

  நிர்மலா சீதாராமன் பேச்சு

  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது குறித்து கேள்வி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த நிர்மலா சீதாராமன, "அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாகப் பார்க்கவில்லை, டாலரின் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன். அமெரிக்காவின் டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதனால், அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் பண மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது." என்றார்.

  தேங்காய் சட்னி ஊசிப் போகல

  தேங்காய் சட்னி ஊசிப் போகல

  வெங்காய தோசையில் வெங்காயம் கம்மியா இருந்தா.. வெங்காயம் கம்மியா இல்ல தோசை பெருசா இருக்குதுன்னு சொல்லணும். சாம்பார்ல கேரட் தேட வேண்டியிருந்ததா... ஆனா கேரட்ல சாம்பாரை தேட வேண்டியதில்லைல. எல்லாத்தையும் பாசிட்டிவா பாருங்க. அதுதான் எல்லாமே. வேற என்ன குறை. தேங்கா சட்னியில தேங்காய் ஊசி போயிருந்ததா. தேங்காய் அப்படியே தான் இருந்தது. நாள் தான் கடந்து போச்சு. அதுக்கு தேங்கா என்ன பண்ண முடியும். நீங்க எல்லாத்தையும் நெகட்டிவா யோசிக்கிறீங்க. ஒரு படத்துல சொல்லுவாங்கல்ல. ஒரு சின்ன வரி பக்கத்துல பெரிய வரி போட்டு பாருங்க, அப்புறம் அந்த சின்ன கோடு பத்தி நீங்க கவலைப் படமாட்டீங்க. என்னது அது கோடா. கோடோ ரோடோ நாங்க அத வரின்னுதான் சொல்லுவோம்." என நய்யாண்டியாக விமர்சித்த வீடியோ டிரெண்டான நிலையில், தற்போது புதிதாக ஒரு வீடியோவை போட்டுத் தாக்கி உள்ளார் வினோதினி.

  ரெய்டு வந்துட்டா

  ரெய்டு வந்துட்டா

  அப்பா நான் டாலர் vs ரூபாய் வீழ்ச்சி.. தேங்காய் சட்னி ஊசிப்போச்சுன்னாங்கிற வீடியோ போட்டேன்ல அது டிரெண்டாகிடுச்சு ப்பா.. ஏதாவது பின் விளைவு வருமாம்மா என அப்பா கேட்க.. பின் விளைவுன்னா ரெய்டு வந்துட்டா.. ரெய்டு வந்தா நாம என்ன கொடைக்கானல்ல இருக்கிற காட்டு பங்களாவையா காட்ட முடியும்.. கழுத்துல இருக்கிற செயினை உள்ளே போடுப்பா என அந்த வீடியோவில் கலாய்க்கிறார்.

  உள்ளே போட்டுட்டா

  ஒருவேளை உள்ளே போட்டுட்டா என வினோதினியின் அப்பா கேட்க, சற்றே பயந்தது போல, ஆமாம்ப்பா என்னை உள்ளே போட்டுட்டா நீ என்ன பண்ணுவ? என வினோதினி கேட்க, கொஞ்ச நாள் தானே மேனேஜ் பண்ணி சந்தோஷமா இருப்பேன்னு அப்பா ஜோக் அடிக்க, என்னை உள்ளே போட்டுட்டா வெளியே எடுக்க என்ன பண்ணுவன்னு வினோதினி கேட்டு தலையில் அடித்துக் கொள்ளும் வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. வினோதினியி இந்த துணிச்சலை பாராட்டும் ரசிகர்கள், எதற்கும் சற்று ஜாக்கிரதையாகவே இருங்க என எச்சரித்தும் வருகின்றனர்.

  English summary
  Actress Vinodhini Vaidyanathan latest satire video on Nirmala Sitharaman trending in social media. Vinodhini recently trolls Nirmala Sitharaman statement on Dollar value hiked but Rupee value not gets down.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X