நடிகை விஷ்ணுபிரியா திருமணம்.. தயாரிப்பாளரின் மகனை மணந்தார்!
திருவனந்தபுரம்: தமிழில் நாங்க படத்தில் நடித்த நடிகை விஷ்ணுபிரியாவின் திருமணம் ஆலப்புழாவில் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழில் 'நாங்க' படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு பிரியா. புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் பிரபல நடிகையாக உள்ளார். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், பல டிவி சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
இந்நிலையில் விஷ்ணு பிரியாவுக்கும் பிரபல மலையாள இயக்குநரும் தயாரிப்பாளருமான ஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய்க்கும் அண்மையில் திருமணம் நிச்சயமானது.
இவர்களின் திருமணம் நேற்று ஆலப்புழாவில் நடைபெற்றது. இதில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பலர் கலந்துகொண்டனர். நடிகை விஷ்ணுபிரியா ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











