'அலைபாயுதே' படத்தில் நடனமாடிய சோபியா ஹக் புற்றுநோயால் மரணம்

டிவி. நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய சோபியா ஹக். பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். 'பாம்பே ட்ரீம்ஸ்', 'காரனேசன் ஸ்ட்ரீட்', 'வா வா கேர்ள்ஸ்' உட்பட பல படங்கள் பிரபலமானவை. அவரை 'அலைபாயுதே' படத்தில், 'செப்டம்பர் மாதம்' என்ற பாடலுக்கு நடனமாட அழைத்து வந்தார். இவர், விஜய் நடித்த 'உதயா' படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
எம்டிவி மற்றும் வி சேனல்களில் தொகுப்பாளராகவும் இருந்த இவர், லண்டனில் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சோபியா அதற்கு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மரணமடைந்துள்ளார். அவர் இறந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அவரது மறைவுக்கு பிரபல பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications