twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலியல் வழக்கு.. பாதுகாப்பு கேட்டு.. முதல்வரிடம் முறையிட்ட பிரபல நடிகை!

    |

    கேரளா : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிரபல நடிகை கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பாதுகாப்பு கோரினார்.

    தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017-ல் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும்போது கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளானார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை செய்த நடிகையின் கார் டிரைவர் பல்சர் சுனி என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

    actress who first met and appeals Chief Minister Pinarayi Vijayan

    கைது செய்யப்பட்ட திலீப் தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார். நடிகர் திலீப் மீது இயக்குனர் பாலச்சந்திரகுமார் புதிய குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதில், நடிகை மானபங்க வீடியோவை திலீப் வி.ஐ.பிக்களுக்கு போட்டு காட்டியதாக கூறியிருந்தார். மேலும், அந்த வீடியோ திலீப் வசம் கூறியதை அடுத்து, காரின் பேரில் 20 பேர் கொண்ட போலீசார், கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவாவில் உள்ள நடிகர் திலீப்பின் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு நடந்து வருகிறார்கள். இவ்வழக்கு விசாரணை கொச்சி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயனை அந்த நடிகை சந்தித்து தனது நிலையை விளக்கினார். 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அரசு கட்டாயம் உதவும் என்று பினராயி விஜயன் உறுதியளித்துள்ளதாக நடிகை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து காவல்துறை ஆணையரை அழைத்து நடிகைக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகளைச் செய்யுமாறு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

    Read more about: கேரள kerala cm actress
    English summary
    Amidst a heated political row in the state over a plea filed by her in the Kerala High Court, the survivor of the 2017 sexual assault met Chief Minister Pinarayi Vijayan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X