ஓணம்.. கவர்ந்திழுத்த கசவு சேலையில்.. கலக்கியது யாரு.. நீங்களே பாருங்க!

சென்னை: ஓணம் நேற்றே முடிந்த நிலையில் இன்றும் நடிகைகளின் அசத்தல் போட்டோ இன்டெர்நெட்டை திணறடித்து வருகிறது. அவர்களில் உங்கள் மனதை கவர்ந்த நடிகைகள் யார் என்பதை சொல்ல உங்களுக்கு ஒரு வாய்ப்பு ரசிகர்களே..

Recommended Video

Nayanthara Vignesh Shivan Couple Onam Celebration | oneindia tamil

நாடு முழுவதும் உள்ள மலையாள மக்களால் நேற்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓணம் பண்டிகை சற்று களையிழந்து காணப்பட்டாலும் மக்கள் தங்களின் வீடுகளில் உற்சாகமாய் கொண்டாடினர்.

நடிகைகள் போட்டோ ஷுட்

நடிகைகள் போட்டோ ஷுட்

நடிகைகள் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் திருவோண திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். தங்களின் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் தங்களின் சமூக வலை தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே தனி விமானத்தில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு சென்றார். கையோடு காதலர் விக்னேஷ் சிவனையும் அழைத்து சென்ற நயன்தாரா பாரம்பரிய உடையில் தம்பதி சகிதமாக விக்னேஷ் சிவனுடன் ஓணம் திருநாளை கொண்டாடினர்.

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ்

தனது அம்மாவுடனும் அன்பை பகிர்ந்து சிறப்பாக கொண்டாடினார். அவர் தனது காதலருடனும் அம்மாவுடன் ட்ரெடிஷ்னல் லுக்கில் ஓணம் கொண்டாடிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது. அவரை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை கீர்த்தி சுரேஷும் தனது குடும்பத்தினருடன் ஓணம் கொண்டாடிய கையோடு போட்டோ ஷுட் நடத்தினார்.

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி

அவரை தொடர்ந்து ரவுடி பேபியான நடிகை சாய் பல்லவி. நடிகை சாய் பல்லவியும் தனது ஓணம் சேலையில் பாரம்பரிய லுக்கில் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தியிருந்தார். ஃபிரி ஹேர் விட்டப்படியும் கொண்டை போட்டப்படியும் போட்டோ ஷுட் நடத்தினார். அந்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

நடிகை நிவேதா தாமஸ்

நடிகை நிவேதா தாமஸ்

அடுத்து நடிகை நிவேதா தாமஸ், தமிழ், மலையாளம், தெலுஙகு என பல மொழி படங்களில் நடித்து வரும் இவரும் ஓணம் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தினார். ஓணம் சேலையில் அவர் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் வாவ் என வர்ணித்தனர்.

நடிகை பார்வதி நாயர்

நடிகை பார்வதி நாயர்

நடிகை பார்வதி நாயர் ஓணம் சேலையிலும் கவர்ச்சி காட்டி கிறங்க வைத்தார். இடுப்பு தொப்புள் என காட்டியும் பாரம்பரிய நடன ஸ்டெப்பில் போஸ் கொடுத்தும் போட்டோ ஷுட் நடத்தினார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்தது.

நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

நடிகை கல்யாணி பிரிய தர்ஷனும் பூக்கோலமிட்டு அதற்கு அருகில் அமர்ந்தப்படியே போட்டோ ஷுட் நடத்தினார். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், கொண்டை, கொண்டையில் மல்லிப்பூ, கை நிறைய வளையல் என அட்டாகசமாய் இருந்தார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

மஞ்சிமா மோகன்

மஞ்சிமா மோகன்

நடிகை மஞ்சிமா மோகன் ஓணம் சேலையில் ஃபிரி ஹேர் விட்டப்படி சிம்பிள் லுக்கில் அசரடித்தார். நேட்சுரலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் மஞ்சிமா மோகன் நேற்று தனது எளிமையான போட்டோக்களாலும் ரசிகர்களை சொக்க வைத்தார்.

உங்களுக்கு பிடித்தது யார்?

உங்களுக்கு பிடித்தது யார்?

இன்னும் பல நடிகைகள், மலையாள மொழி பேசாத நடிகைகள் என பலரும் ஓணம் சேலையில் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தினர். அவர்களின் உங்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை யார் என்பதை கமெண்டில் பதிவிட்டு எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X