மன்னிப்பு கேட்டார்.. ரஜினி குறித்து நடிகை ஒய். விஜயா பேசியது என்ன?
சென்னை: பழம் பெரும் நடிகையான ஒய் விஜயா, ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
70 மற்றும் 80 காலகட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை ஒய். விஜயா.

இவர் கதாநாயகியாக, வில்லியாக, நகைச்சுவை நடிகையாக மற்றும் ஏராளமான படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை ஒய். விஜயா: வாணி ராணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஒய். விஜயா. இவர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் முதல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரை பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
ரஜினியுடன் பல படத்தில்: சூப்பர் ஸ்டார் ஹீரோவாக நடித்து வெளியான முதல் திரைப்படம் பைரவி படத்தில் நான் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். அதன் பிறகு ஆறு புஷ்பங்கள், மனிதனின் மறுபக்கம், தில்லுமுல்லு போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறேன்.
ராஜாதி ராஜா படத்தில் நடிக்கும் பொழுது கர்ப்பிணியாக இருந்தேன். அப்போது ரஜினி, என்னை சந்தித்து படப்பிடிப்பின் போது நீங்கள் எந்த சிரமமும் மேற்கொள்ள வேண்டாம் உங்களது காட்சி முடிந்தவுடன் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
மன்னிப்பு கேட்டார்: ஒருநாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இடத்தில், ரசிகர்கள் அவரை மறித்துக்கொண்டதால், படப்பிடிப்பிற்கு வர கொஞ்சம் லேட்டாகி விட்டது, உடனே ரஜினி, என்னிடம் வந்து கொஞ்சம் லேட்டாகிவிட்டது தன்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று பணிவுடன் கேட்டார். அவ்வளவு பெரிய நடிகர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
சிறந்த மனிதர்: அந்த அளவிற்கு ரஜினிகாந்த் தன் சக நடிகர்கள் மீது மிகவும் மரியாதையுடனும், அக்கறையுடனும் நடந்து கொள்ளும் ஒரு சிறந்த மனிதர் ரஜினி என ஒய் விஜயா கூறியுள்ளார். எந்த ஆடம்பரத்தையும் விரும்பாத ரஜினி பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் பழகுவதற்கும் மிகவும் எளிமையானவர், என பல நடிகர்கள் சொன்னது போல விஜயாவும் அவரை புகழ்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











