விபச்சாரத்தில் நடிகைகள்... லிஸ்ட் கொடுத்த யமுனா!

கிட்டத்தட்ட இதே போன்றதொரு நிலை கன்னடப் படவுலகில் உருவாகியுள்ளது.
பிரபல கன்னட நடிகை யமுனா. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ஒரு தொழிலதிபருடன் ஓட்டலில் உல்லாசமாக இருந்த யமுனாவை பெங்களூர் போலீசார் விபசார வழக்கில் கைது செய்தனர். அவருடன் மேலும் சில அழகிகளும் கைதானார்கள்.
யமுனா பற்றி ஏற்கனவே போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தன. ஆந்திரா போலீசாரும் யமுனா விபசாரத்தில் ஈடுபடுவதாக தகவல் அனுப்பினர். இதைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் ரகசியமாக அவரைக் கண்காணித்து வந்தனர்.
யமுனாவிடம் விசாரணை நடத்தியபோது விபசாரத்தில் ஈடுபடும் மேலும் நடிகைகள் பற்றிய தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. வேறு மொழிப் படங்களில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.
அந்த நடிகைகளின் பெயர் பட்டியலையும் அளித்துள்ளாராம். அவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் தயாராகி வருகிறார்கள். விபசாரம் நடைபெறும் ஓட்டல்கள், பண்ணை வீடுகள் பற்றிய விபரங்களையும் தெரிவித்து உள்ளாராம்.
இதைத் தொடர்ந்து மேலும் சில ரெய்டுகளை நடத்த பெங்களூர் போலீசார் தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











