வெண்பனியில் செதுக்கிய சிற்பம்..கருப்பு உடையில் ஹார்ட் பீட்டை எகிற வைத்த யாஷிகா ஆனந்த்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் கருப்பு உடையில் தேவதைப்போல இருக்கும் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் கவிதைப்பாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த்.

actress yashika aannand black dress photoshoot

2018 கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார்.

யாஷிகா ஆனந்த்: இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியில் மிரட்டும் யாஷிகா ஆனந்த்க்கு தனி ரசிகர்கள் இருந்தனர் . பின் அதே கவர்ச்சியை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார். பின் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து வெகுஜன மக்களுக்கும் பிடித்த நடிகையாக மாறினார்.

actress yashika aannand black dress photoshoot

சாலை விபத்து: இதையடுத்து, கடந்த 2021 ம் ஆண்டு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது கார் நிலை தடுமாறி சாலை நடுவே இருக்கும் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

actress yashika aannand black dress photoshoot

மூன்று பிரிவில் வழக்கு: கார் ஓட்டிய யாஷிகா பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் இருந்து பூரண குணமடைந்த யாஷிகா தற்போது திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தன் கைவசம் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஒருபடம் என கணிசமான படங்களை வைத்து இருக்கிறார். எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

actress yashika aannand black dress photoshoot

வெண்பனியில் செதுக்கிய சிற்பம்: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது கருப்பு உடையில், லூஸ் ஹேரில் ரசிகர்களை கட்டியிழுக்கும் வகையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X